பாஜக கூட்டணியில் தமாகா.,வின் வெற்றி உறுதி.. ஜி கே வாசன் நம்பிக்கை

Mar 22, 2024,02:49 PM IST

சென்னை: பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளில், இரண்டு தொகுதியின் வேட்பாளர்களை இன்று அறிவித்தார் தமாகா தலைவர் ஜி கே வாசன். இந்த தேர்தலில் தங்கள் கட்சி உறுதியாக வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் அவர் தெரிவித்துள்ளார். 


பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் வேணுகோபால் அவர்களும், ஈரோடு தொகுதியில் விஜயகுமார் அவர்களும் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை நாளை மறுதினம் அறிவிப்பதாக ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.




தமாகா தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு 40 பாராளுமன்ற தொகுதிகளில்  புதுவைத் தொகுதி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வெற்றி பெறக்கூடிய நல்ல நிலையை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தும் என நம்புகிறேன். மார்ச் 28 ஆம் தேதி எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி ஏப்ரல் 17 வரை தொடர்ந்து 21 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் அறிவிப்பேன். இந்த தேர்தலில் வெற்றி என்பது உறுதி. எங்கள் கூட்டணியின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.


பாஜகவின் கூட்டணியில் தமாகா மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதி, ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி, ஆகிய மூன்று தொகுதிகளில் எங்களுடைய வெற்றி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதில் ஸ்ரீபெரும்புத்தூரில் வேணுகோபால் போட்டியிடுகிறார். ஈரோடு தொகுதியில் விஜயகுமார் போட்டியிடுகிறார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய  அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நாளை மறுதினம் அறிவிப்பேன் என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்