1,50,000 டன் ஐஸ்.. செவ்வாய் கிரகத்தில் ஒளிந்திருக்கும் ஜில் ஜில் ரகசியம்‌.. கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

Jun 15, 2024,05:10 PM IST

பெர்ன்: செவ்வாய் கிரகத்தில் தர்சிஸ் என்ற எரிலைகள் அடங்கிய பிராந்தியத்தில் உள்ள மிகப் பெரிய பழைய எரிமலையின் உச்சியில் கிட்டத்தட்ட 1,50,000 டன் அளவிலான உறை பனி இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டறிந்துள்ளனர். 


பூமிக்கு மாற்று கிரகமாக விளங்கும் புதிய கிரகத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றனர். மனிதன்  வசிக்கக் கூடிய தகுதியுடன் கூடிய வேற்று கிரகத்தைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளும் வேகம் பிடித்துள்ளன. அந்த  வகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள முக்கிய கிரகம் செவ்வாய்தான். இந்த கிரகத்தில் எதிர்காலத்தில் மனிதன் குடியேறுவான் என்று பலரும் திடமாக நம்புகின்றனர். இதனால் செவ்வாய் கிரக ஆய்வுகளில் கிடைக்கும் சிறு சிறு செய்திகளும் உற்று நோக்கப்படுகிறது.




செவ்வாய் கிரகம் சூரியக் குடும்பத்தில் நான்காவது கிரகம் ஆகும், அதாவது பூமிக்கு அடுத்து உள்ள கிரகம்தான் செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏனெனில் அது இரும்பு ஆக்சைடு தூசியால் மூடப்பட்டிருப்பதால் இந்த நிறம். இதனால்தான் இதை செவ்வாய் என்றும், சிவப்பு கிரகம்  என்றும் அழைக்கிறோம்.


இந்த நிலையில் பூமத்திய ரேகைக்கு அருகில் செவ்வாய் கிரகத்தின் முன்னாள் எரிமலைகளின் மேல் உறைபனி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிமலைகள் இப்போது செயலிழந்து விட்டன. இதில் மிகவும் உயரமான எரிமலை ஒலிம்பஸ் மான் என்பது. இந்த எரிமலையின் உச்சியில் 1,50,000 டன் நீர் பனிக்கட்டிகள் உள்ளதாம். உறைபனியாக இது மூடிக் கிடக்கிறது. இந்த எரிமலையானது, 29,600 அடி உயரமும் , சுமார் 450 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. 




இந்த பழங்கால எரிமலை கிழக்கு நோக்டிஸ் லாபிரிந்தஸ் பகுதியில் செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ளது.

நாசாவின் மரைனர் 9, வைக்கிங் ஆர்பிட்டர் 1 மற்றும் 2, மார்ஸ் குளோபல் சர்வேயர், மார்ஸ் ஒடிஸி, மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் மற்றும் ஈஎஸ்ஏவின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு செவ்வாய் கிரக ஆய்வுக் கலங்களில் கிடைத்த புள்ளி விவங்களைக் கொண்டு 

இந்த கண்டுபிடிப்பை சுவிஸ் விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். 


செவ்வாய் கிரகத்தில் உள்ள எரிமலையின் மேல் உள்ள உறைப்பனி  இருப்பது விஞ்ஞானிகளிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீராதாரம் இருப்பதையே இது காட்டுவதாக விஞ்ஞானிகள் மகிழ்கிறார்கள்.


Images: ESA

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்