டோக்கியோ: ஜப்பானில் புதிய வகை திருமண முறை வெகு வேகமாக பரவி வருகிறதாம். அதாவது பிரண்ட்ஷிப் கல்யாணம் என்ற பெயரில் புதிய வகை திருமணத்தை அங்குள்ள பலர் நாடி வருகிறார்கள்.
கல்யாணம் என்றால் என்னவெல்லாம் இருக்குமோ, என்னவெல்லாம் நடக்குமோ.. அது எதுவுமே இந்த கல்யாணத்தில் இருக்காது. அதாவது காதலும் இருக்காது, காமமும் இருக்காது. முறைப்படி திருமணம் செய்து கொள்வார்கள், சேர்ந்தும் வாழ்வார்கள்.. ஆனால் அவர்களுக்குள் எந்த கமிட்மென்ட்டும் இருக்காது. ஜாலியாக, நட்போடு, தங்களது மனதை கருத்தை ஒத்தவர்களுடன் இணைந்து வாழும் திருமண வாழ்க்கையாக இதை சொல்கிறார்கள்.
என்னங்க இது .. சுத்த பேத்தலா இருக்கு.. அதெப்படி செக்ஸ் இல்லாமல் கல்யாணம், அட்லீஸ்ட் காதல் பாசம் நேசம் கூடவா இருக்காது.. அப்படின்னு நீங்க கேட்கலாம். அப்படித்தான் இருக்கிறது இந்த கல்யாணம். வெளியுலகைப் பொறுத்தவரை இவர்கள் திருமணம் ஆனவர்கள்.. கணவன் மனைவியாகவே பார்க்கப்படுவார்கள், அங்கீகரிக்கவும் படுவார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் இவர்கள் அப்படி எதிலும் நடந்து கொள்ள மாட்டார்கள். இதுதான் இந்த திருமணத்தின் முக்கிய அம்சமாம்.
மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகளின் வரிசையில் ஜப்பானும் ஒன்று. இங்கு பலர் குழந்தை பெற்றுக் கொள்வதையே விட்டு விட்டனர். பலர் தத்தெடுத்து வளர்ப்பதில் அக்கறை காட்டுகின்றனர். பலர் திருமணம் செய்து கொள்வதையே மறக்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில்தான் பல்வேறு காரணங்களுக்காக இந்த பிரண்ட்ஷிப் திருமண முறை அங்கு பிரபலமாகி வருகிறது. பல இளம்பெண்கள், ஆண்கள் இந்த திருமண முறையை விரும்புகிறார்கள்.
இந்த திருமணத்தால் எந்தவிதமான சுமையும் இருப்பதில்லை. செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இல்லை, எந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை.. சட்டரீதியாக கணவன் மனைவியாக இருந்தால் சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கும். அதேசமயம், நமக்குப் பிடித்தாற் போலவும் வாழ்ந்து கொள்ளலாம் என்பதால் இந்தத் திருமண முறையை அவர்கள் நாட ஆர்வம் காட்டுகிறார்களாம்.
இந்தத் திருமண முறையில் இணையும் ஜோடிகள் ஒத்து கருத்துடையவர்களாக, ஒத்த சிந்தனை உடையவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் இந்த திருமண முறையில் இணைகிறார்கள். இந்த திருமண முறையில் செக்ஸ் கிடையாது என்பதால் குழந்தையைப் பெறுவது, அதை வளர்த்து ஆளாக்குவது போன்ற கடமை கிடையாது. ஒரு வேளை குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டால் தத்தெடுத்து வளர்த்துக் கொள்வார்களாம். அதேசமயம், இவர்களுக்குத்தான் செக்ஸ் இருக்காது.. ஆனால் இவர்கள் வேறு யாருடனாவது செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்பினால் வைத்துக் கொள்ளலாமாம். அதற்கேற்றார் போல கல்யாணத்திற்கு முன்பே அக்ரிமென்ட் போட்டுக் கொள்வார்களாம்.
இதை எப்படி கல்யாண உறவு என்று எடுத்துக் கொள்வது என்று நமக்கு சந்தேகம் வரும்.. நிச்சயம் இதுவும் கல்யாண உறவுதான்.. காரணம், முறைப்படிதான் இந்தத் திருமணத்தை நடத்துகிறார்கள். அதேசமயம், ஒரு கணவன் மனைவி எப்படி இருப்பார்களோ அப்படி இருக்க மாட்டார்கள்.. அதுதான் வித்தியாசம்.
செக்ஸில் நாட்டம் இல்லாதவர்கள்தான் பெரும்பாலும் இந்தத் திருமண முறையை தேர்வு செய்கிறார்கள். அதேபோல தன் பாலினத்தவரும் (ஹோமோ செக்ஸ் மற்றும் கே) ஆகியோரும் இந்தத் திருமண முறையை விரும்புகிறார்கள். இவர்கள் வழக்கமான திருமண வாழ்க்கையை விரும்பாதவர்கள். அதிலிருந்து விலகியிருக்க விரும்புபவர்கள். அவர்களிடையே இந்தத் திருமண முறை பிரபலமாகி வருகிறதாம்.
ஒவ்வொரு வாழ்க்கை.. ஒவ்வொரு விதம்.. வானவில் உலகம்.. வாழ்த்துவோம்.. இவர்களையும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}