செம்பரம்பாக்கம்.. மணமக்களுக்கு பூண்டு மாலை போட்ட நண்பர்கள்.. இது புதுசா இருக்குண்ணே.. புதுசா இருக்கு

Nov 02, 2024,03:54 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பூண்டின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு, அவரது நண்பர்கள் பூண்டு மாலையை பரிசாக வழங்கி கலகலப்பை ஏற்படுத்தினர்.


நாம் அன்றாடம் சமையல்களில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், மருந்துவ குணம் கொண்ட பொருளாகவும் பூண்டு உள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய பூண்டு சந்தை தேனி மாவட்டத்தில்தான் உள்ளது. ஏனெனில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பூண்டுகள், இந்த சந்தைக்கு கொண்டுவரப்பட்டு இங்குதான் விலை நிர்ணையம் செய்யப்படுகிறது. அதேபோல் பூண்டு உற்பத்தியில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. இங்கிருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பூண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வியாபாரிகள் மொத்தமாக அல்லது சில்லறை விலையில் விற்பனை செய்கின்றனர். 

இந்த நிலையில் தற்போது  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் பூண்டின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.   வழக்கமாக ரகத்திற்கு ஏற்ப ஒரு கிலோ பூண்டு ரூபாய் 120 முதல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலை அதிகரித்து ஒரு கிலோ பூண்டின் விலை ரூபாய் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. 




இந்த நிலையில் சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறவினர்கள் நண்பர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது பூண்டின் விலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தங்கதம்திற்கு நிகராக அதை கருதி மணமக்களுக்கு நண்பர்கள் சிலர் பூண்டு மாலையை பரிசாக வழங்கினர்.


பூண்டு மாலை போட்டதால் திருமண விழாவிலும் கலகலப்பு கூடியது. இப்படித்தான் முன்பு வெங்காய விலை விண்ணைத் தொட்டபோது வெங்காய மாலை போட்டனர். அதேபோல தக்காளி மாலையும் போடப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. இப்போது பூண்டுக்கு யோகம் அடித்துள்ளது..!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்