திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா.. அப்டில்லாம் இல்லைங்க.. அடியோடு மறுத்த பாக்ஸ்கான்

Jun 27, 2024,05:42 PM IST

சென்னை: திருமணம் ஆன பெண்களை  வேலைக்கு  எடுக்க மறுத்ததாக பாக்ஸ்கான் நிறுவனத்தின் மீது சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐபோன்கள் அசெம்பிளிங் செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும், திருமணமான பெண்கள் வேலைக்கு எடுக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் சமீப காலமாக எழுந்து வருகின்றன. இந்த புகார் தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.




இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


எங்கள் நிறுவனத்தில் இது போன்ற பாலிசி எதுவும் இல்லை. சமீபத்தில் வேலைக்கு எடுக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள். பாதுகாப்பு கருதி, பாலினம் மற்றும் மதம்  பார்க்காமல் அனைத்து பணியாளர்களும் தங்கம் உள்ளிட்ட உலோக பொருட்களையும் அணிவதை தவிர்க்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது. திருமணம் ஆன பேண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற நிபந்தனை எங்களின் கொள்கையே கிடையாது. வேலைக்கு தேர்வு ஆகாத சிலர் இது போன்ற குற்றச்சாட்டை கிளப்பி விட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டு நிறுவனத்தை பாதிக்கும்.


இது அனைவருக்கும் பொதுவான விதி. ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. அவர்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தாலும், திருமணமாகாதவர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. தொழிற்சாலையில் பணிபுரியும் போது அனைத்து விதமான உலோகங்களையும் அகற்ற வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காகவே எந்த வொரு உலோகத்தையும் அணிந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. பல்வேறு தொழிற்சாலைகளிலும் இதுபோன்ற கட்டப்பாடுகள் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்