Loksabha elections: 9 மாநிலங்களில்.. 96 தொகுதிகளுக்கு.. நாளை.. 4வது கட்ட மக்களவைத் தேர்தல்!

May 12, 2024,09:59 PM IST

டெல்லி: ஆந்திர மாநில சட்டசபைக்கும், நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 96 மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


7  கட்டமாக நடத்தப்பட்டு வரும் லோக்சபா தேர்தலில் நாளை 4வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்து விட்டது.




ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகள், தெலங்கானாவில் 17, உத்தரப் பிரதேசம் 13, மகாராஷ்டிரா 11, மேற்கு வங்காளம் 8, மத்தியப் பிரதேசம் 8, பீகார் 5, ஜார்க்கண்ட், ஒடிஷாவில், ஜம்மு காஷ்மீரில் தலா ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதவிர ஆந்திர மாநில சட்டசபைக்கும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.


சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரினமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா,  முன்னாள் நடிகர் சத்ருகன் சின்ஹா, அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளில் நாளைதான் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்