14 நகரங்களில் சதத்தைத் தாண்டி வெளுத்த வெயில்.. 107 டிகிரியுடன் ஈரோடு டாப்.. முடியலைய்யா முடியலை!

Apr 05, 2024,07:47 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஈரோட்டில் இன்று அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தி மக்களை நிலை குலைய வைத்து விட்டது.

தமிழ்நாடு முழுவதும் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதற்கேற்ப வெயில் நாளுக்கு நாள் வெயில் வாட்டி எடுக்கிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் கருப்பாகி பேய்க் கலருக்கு மாறி விடுவோம் போல.. அந்த அளவுக்கு வெயில் வெளுக்கிறது.

இன்று தமிழ்நாட்டில் 14 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது வெயில். இதில் அதிகபட்ச அளவாக ஈரோட்டில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது. ஈரோட்டில் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். வேட்பாளர்கள், அரசியல் கட்சியினரும் கூட காலையிலும் மாலையிலும்தான் பெரும்பாலும் பிரச்சாரம் செய்கின்றனர். முடிந்தவரை மதியம் வெளியில் வருவதை தவிர்த்து வருகிறார்கள்.


தமிழ்நாட்டில் இன்று அதிக அளவில் வெயில் பதிவான நகரங்கள் லிஸ்ட்:

ஈரோடு  -107 டிகிரி பாரன்ஹீட்
சேலம் - 105
கரூர் பரமத்தி - 105
திருப்பத்தூர் - 104
திருச்சி - 104
தர்மபுரி - 104
வேலூர் - 103
நாமக்கல் - 103
கோயம்புத்தூர் விமான நிலையம் - 102
திருத்தணி - 102
தஞ்சாவூர் - 101
சென்னை விமான நிலையம்- 100
மதுரை சிட்டி - 100
பாளையங்கோட்டை - 100

வானிலை ஆய்வு மைய அறிக்கை:

தமிழ்நாட்டில் இன்று பதிவான வெப்பநிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை அனேக இடங்களில் பொதுவாக இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. புதுவையில் இயல்பை விட சற்று அதிகமாகவும் காரைக்கால் பகுதியில் இயல்பாகவும் இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மூன்று முதல் 3.5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 39 முதல் 41 டிகிரி செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் 33 முதல் 37 டிகிரி செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23 முதல் 29 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

நாளை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏழாம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் விதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த நான்கு நாட்களில் இரண்டு முதல் மூன்று செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்