மறைந்தார் மைக் புராக்டர்.. 77 வயது.. மறக்க முடியாத தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர்!

Feb 18, 2024,09:29 AM IST

பிரிட்டோரியா:  தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் உலகம் ஒரு ஒரு அருமையான கிரிக்கெட்டரை இழந்துள்ளது. முன்னாள் ஆல் ரவுண்டர், கிரிக்கெட் கோச், ஐசிசி ரெப்ரீ என பல வகையிலும் கிரிக்கெட்டுடன் இணைந்திருந்த மைக் புராக்டர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 77.


தென் ஆப்பிரிக்க அணியின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆளுமைகளில் ஒருவர் மைக் புராக்டர். அவர் கிரிக்கெட் ஆடியது குறுகிய காலமே.  ஆனாலும் மிகச் சிறந்த டெஸ்ட் வீரராக விளங்கியவர். இனவெறி ஆட்சி நடந்து வந்த காலகட்டத்தில், 1970 முதல் 80கள் வரை தென் ஆப்பிரிக்கா மீது பல்வேறு தடைகள் இருந்ததால் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட அந்த அணிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் புராக்டரும் ஒருவர்.




இவர் ஆடியது மொத்தமே 7 டெஸ்ட் போட்டிகளில்தான். அத்தனையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது மட்டுமே. அவரது பந்து வீச்சு சராசரி 15.02 ஆகும். 7 போட்டிகளில் விளையாடிய அவர் எடுத்த விக்கெட்கள் 41. மிகச் சிறப்பான பந்து வீச்சாளர் புராக்டர். அவர் கைகளிலிருந்து பந்து வெளியேறும் விதமே அலாதியானது, அதிரடியானது. இவர் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட்டில் கூட தென் ஆப்பிரிக்கா தோற்றதில்லை. ஆறில் வென்று, ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.


பேட்டிங்கிலும் பிரமாதப்படுத்தியவர் புராக்டர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 1969-70 போட்டித் தொடரில் 4-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இதில் புராக்டரும் அபாரமான பங்களிப்பைக் கொடுத்திருந்தார். 1970ம் ஆண்டின் சிறந்த வீரராக விஸ்டன் இவரைத்  தேர்வு செய்து கெளரவப்படுத்தியிருந்தது.


தென் ஆப்பிரிக்கா மீதான கிரிக்கெட் தடை நீங்கிய பிறகு அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் புராக்டர். 1992 உலகக் கோப்பைப் போட்டித் தொடரின்போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். அந்த தொடரில் அரை இறுதி வரை தென் ஆப்பிரிக்கா முன்னேறியது. அதன் பின்னர் 2002ம் ஆண்டு முதல் 2008 வரை ஐசிசி நடுவராக செயல்பட்டார். 


சமீபத்தில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சனிக்கிழமையன்று இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சையின்போது ஏற்பட்ட சிக்கலால் அவர் மரணத்தை சந்திக்க நேர்ந்ததாக அவரது மனைவி மேரினா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Half yearly exam: டிசம்பர் 9 டூ ஜனவரி 1.. 9 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை.. கல்வித்துறை

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகள்.. விருந்து வைத்த விஜய்.. வாசலில் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

தொடர் உயர்வில் தங்கம்... சவரன் ரூ.58,000த்தை கடந்தது.. திகைப்பில் மக்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்