புற்றுநோய்.. உருகுவேயைச் சேர்ந்த முன்னாள் மிஸ் வேர்ல்ட் மரணம்!

Oct 16, 2023,01:09 PM IST
மான்டிவீடியோ:  முன்னாள் உலக அழகி ஷெரிகா டி அர்மாஸ் தனது 26 வயதில் மரணம் அடைந்துள்ளார். 

உருகுவே நாட்டை சேர்ந்த இவர் கர்ப்பப்பை புற்று நோய் காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதில் புற்றுநோய்க்கு அர்மாஸ் பலியாகியிருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது.

ஷெரிகா டி அர்மாஸ்சுக்கு புற்று நோய் கண்டறியப்பட்டதில் இருந்து தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்தார். சிகிச்சை எதுவும் பலன் அளிக்காத நிலையில் அவர் மரணித்துள்ளார்.



இதுபற்றி அவருடைய சகோதரி மெய்க் டி அர்மாஸ் கூறுகையில், "சிறிய சகோதரி, உயரமாக பறக்கவும்" என  இரங்கல் தெரிவித்துள்ளார். ஷெரிகா டி அர்மாஸின் இறப்பிற்கு உருகுவே நாட்டு மக்கள் மற்றும் உருகுவே நாட்டு அழகிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மிஸ் யூனிவர்ஸ் அழகியான கர்லா ரொமிரோ  விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், என்னுடைய வாழ்வில் நான் சந்தித்தவர்களில் மிக அழகிய பெண்களில் ஒருவர் ஷெரிகா டி அர்மாஸ் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சிவகங்கை மாவட்டத்தில்.. இன்றும் நாளையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு!

news

வாரிசு, கேம்சேஞ்சர் பட தயாரிப்பாளர்.. தில் ராஜு வீட்டில்.. வருமானவரித்துறை திடீர் சோதனை!

news

டிரம்ப்பின் அதிரடி முடிவுகள்.. WHO வேண்டாம். பாரீஸ் ஒப்பந்தம் வேண்டாம்.. இனி 2 பாலினம் மட்டுமே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 21, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

President Donald Trump.. அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றார்.. டொனால்ட் டிரம்ப்!

news

எனது கள அரசியல் பரந்தூரிலிருந்து தொடங்கி விட்டது.. உங்களுடன் கடைசி வரை நிற்பேன்.. விஜய்

news

விஜய்யின் பரந்தூர் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

news

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மைக் சின்னம்!

news

கொல்கத்தா பெண் டாக்டர் கொடூரக் கொலை.. சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை.. நீதிபதி கூறிய காரணம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்