சென்னை: மறைந்த அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மேலாளராக இருந்து, திரைப்படத் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக, அமைச்சராக பொறுப்பு வகித்த மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன் வயோதிகம் காரணமா இன்று காலமானார்.
98 வயதாகும் ஆர்.எம். வீரப்பன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என அனைத்துத் திராவிடத் தலைவர்களுடனும் நெருக்கமாக பழகியவர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர். திராவிட இயக்க தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். 1953ம் ஆண்டில் எம்ஜஆர் நாடக மன்றம் மற்றும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாக பொறுப்பாளராக இருந்தவர். இதன் பின்னர் 1963ம் ஆண்டில் சத்யா மூவிஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை துவங்கினார்.
சத்யா மூவிஸ் நிறுவனத்தின் மூலமாக ஏகப்பட்ட எம்ஜிஆர் படங்களைத் தயாரித்துள்ளார். பின்னாளில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களையும் தயாரித்துள்ளார்.
எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போது அவருடன் இணைந்து செயல்பட்டார் ஆர்.எம்.வீரப்பன். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தபோது, எம்ஜிஆர் மனைவி விஎன்.ஜானகியை முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதன் பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட நல்லிணக்கம் காரணமாக அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்தார். 2 முறை சட்டப்பேரவைக்கும், 3 முறை சட்ட மேலவைக்கும் ஆர்.எம்.வீரப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆர்.எம்.வீரப்பன் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}