கடல்ல போய் ஒளிஞ்சாலும் நம்ம போலீஸ் விடாது.. ராஜேந்திர பாலாஜி அதிரடியால்.. திமுக மகிழ்ச்சி!

Jul 27, 2024,02:58 PM IST

சென்னை:   அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் லேட்டஸ்ட் பேச்சால் திமுகவினர் செம ஹேப்பியாகியுள்ளனர். காரணம், எந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவை எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக கடுமையாக விமர்சித்து வருகிறதோ, அந்தக் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக அவர் கூறியுள்ள கருத்துக்கள் திமுகவுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இந்த மாதத் தொடக்கத்தில் தனது வீட்டின் அருகே அவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பலரும் கைதாகி வருகிறார்கள். கைதானவர்களில் பலர் வழக்கறிஞர்கள் ஆவர்.


ரவுடிகள், ரவுடிகளின் முன்னாள் காதலி, மனைவி என பல்வேறு தரப்பினரும் கைதாகியுள்ள இந்த வழக்கின் விசாரணை மேலும் நீண்டபடி இருக்கிறது. காரணம், மிகப் பெரிய நெட்வொர்க் அமைத்து இந்தக் கொலையை குற்றவாளிகள் அரங்கேற்றியுள்ளனர்.




இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்து வந்தன. இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூறி வந்தனர். இந்தப் பின்னணியில்தான் ராஜேந்திர பாலாஜியின் பதில் வந்துள்ளது.


மோடி எங்களுக்கு டாடி என்று கடந்த அதிமுக ஆட்சியின்போது அதிரடி காட்டியவர் ராஜேந்திர பாலாஜி. மேலும் கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு அப்போதைய திமுக தலைவரான மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தவரும் கூட. தேர்தலுக்குப் பிறகு அவரது அரசியல் அமைதியாகி விட்டது. முன்பு போல பெரிதாக பேசுவதில்லை. இந்த நிலையில்தான் திடீரென ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு வருகை தந்தார் ராஜேந்திர பாலாஜி. அவரது குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் கூறினார்.


அதன் பிறகு வெளியே வந்த ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் சில வார்த்தைகள் பேசினார். அவரது பேச்சு திமுக தரப்புக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. அதேசமயம், அதிமுகவின் நிலைப்பாட்டுக்கு அப்படியே நேர் மாறாக இருந்தது. ராஜேந்திர பாலாஜி கூறுகையில், போலீஸார் சரியாக விசாரிக்கிறார்கள், உண்மையான குற்றவாளிகளைத்தான் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அனைத்துக் குற்றவாளிகளும் சரியான முறையில் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் நம்புகிறார்கள். நம்பிக்கையுடன் உள்ளனர்.


நம்முடைய போலீஸ் விசாரணை குறித்து அவர்கள் திருப்தியுடன் உள்ளனர். சரியான பாதையில்தான் போலீஸ் விசாரணை செல்கிறது என்பதையும் அவர்கள் நம்புகிறார்கள். நம்முடைய போலீஸாரும் சரியான முறையில்தான் செல்கிறார்கள். அவர்கள் விட மாட்டார்கள். குற்றவாளி கடலுக்குள்ளேயே போய் மறைந்தாலும் கூட நம்ம போலீஸ் விடாது, பிடித்துக் கொண்டு வந்து விடும். சிபிஐ விசாரணை தேவையில்லை. இதே கருத்துதான் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடமும் உள்ளது.


இந்த வழக்கின் மூலமாக கூலிப்படை கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.  மக்களிடையே இந்தக் கொலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலிப்படைக் கலாச்சாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஒழிக்க வேண்டும். இந்த வழக்கில் ஆளுக்கு ஆள் கருத்துக் கூறிக் கொண்டிருப்பது சரியல்ல. விசாரணை நல்லபடியாக போகிறது, அது முடியட்டும் என்று கூறினார் ராஜேந்திர பாலாஜி.


அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கடுமையான விமர்சனங்களை வைத்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது திமுகவினரிடையே மகிழ்ச்சியையும், அதிமுகவினரிடையே சலசலப்பையம் ஏற்படுத்தியுள்ளது. இப்படித்தான் முன்பு மதுரை செல்லூர் ராஜு, ராகுல் காந்தியை புகழ்ந்து பேசியிருந்தார். அதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மேலும் 2 மகன்கள் உள்ளனராம்.. யார் மூலமா தெரியுமா?.. பரபர தகவல்!

news

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பினார் மகாவிஷ்ணு.. சைதாப்பேட்டை போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை!

news

ஸ்டிரைக் அறிவிப்பை மறு பரிசீலனை பண்ணுங்க.. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

news

சின்னத்திரையில் பாலியல் அத்துமீறல்கள் கிடையாது.. எல்லாமே மியூச்சுவல்தான்.. நடிகையின் ஸ்டேட்மென்ட்!

news

28வது வருட திரையுலக வாழ்க்கையில் சிம்ரன்.. தி லாஸ்ட் ஒன்.. நாயகியாக மீண்டும் ரீ என்ட்ரி!

news

விதம் விதமான விநாயகர்கள்.. தமிழ்நாடு முழுவதும் 35,000 சிலைகள்.. விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

news

விளையாட்டுக் களத்திலிருந்து.. அனல் பறக்கும்.. தேர்தல் களத்திற்கு என்ட்ரி கொடுக்கும் வினேஷ் போகத்!

news

செப்டம்பர் 07 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

ரிஷப ராசிக்காரர்களே... திறமை வெளிப்படும் காலமிது

அதிகம் பார்க்கும் செய்திகள்