சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நின்றாலும் வரி, உட்கார்ந்தாலும் வரி போடுகிறார்கள். மக்களை துன்புறுத்தி அரசு கருவூலத்தை நிரப்பும் வேலையை செய்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.
திமுக அரசை கண்டித்து, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவை தமிழகத்தில் ஏற்படுவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி மாநிலம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பேசும்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் கூறியதாவது: வரி விஷயத்தில் சென்னை மாநகராட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது. மக்களை துன்புறுத்தி அரசு கருவூலத்தை நிரப்பும் வேலையை செய்கின்றனர். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நின்றாலும் வரி, உட்கார்ந்தாலும் வரி போடுகிறார்கள்.
வரி விஷயத்தில் சென்னை மாநகராட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது. விமான சாகச நிகழ்ச்சியின் போது பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் இறப்புக்கு வருத்தப்பட வேண்டிய நேரத்தில் கலைஞர் நினைவு பூங்காவை திறந்து வைக்கின்றனர் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
{{comments.comment}}