பாஜக கதவைத் திறந்திருக்கலாம்.. நாங்க சாத்திட்டோம் - அதிமுக ஜெயக்குமார் அதிரடி

Feb 07, 2024,06:23 PM IST
தஞ்சாவூர்:   பாஜக வேண்டுமானால் கூட்டணிக்கான கதவுகளைத் திறந்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் அடைத்து விட்டோம் என்று  முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் லடாய் ஏற்பட்டு பாஜகவை வெளியேற்றி விட்டது. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த ஜெயலலிதா குறித்துக் கூறிய கருத்துக்களால் கொந்தளித்த அக்கட்சி தலைமை, கூட்டணியை விட்டு பாஜகவை விலக்குவதாக தீர்மானம் போட்டு அதிர வைத்தது.

இவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. இந்த நிலையில் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேர பாஜக தவிப்பில் உள்ளது. மீண்டும் கூட்டணியில் இடம்பெறுவதற்காக பல்வேறு வழிகளில்  முயன்று வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கூட, இதில் இறங்கியுள்ளார்.



இந்த நிலையில் தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அமைச்சர் அமித் ஷா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் கூட்டணிக்கான வாய்ப்புகள் துளிர்த்திருப்பதாக பலரும் கருதினர்.

ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று தேங்காய் உடைப்பது போல சொல்லி விட்டார் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசுகையில்,   கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். அவர்கள் வேண்டுமானால் கதவுகளைத் திறந்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் அடைத்து விட்டோம். முன் வைத்த காலை நாங்கள் எப்போதும் பின் வைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.

இதனால்  பாஜக தரப்பு டென்ஷனாகியுள்ளது. அமித்ஷா போன்ற தலைவரின் கருத்தை ஜெயக்குமாரை விட்டு கேலி செய்வது போல அதிமுக தலைமை பதிலளிக்க வைத்துள்ளதாக அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இவர்களுக்கு இடையே நிலவும் சண்டையைப் பார்த்தால் கூட்டணி மீண்டும் ஏற்படுவது சிரமம் போலத்தான் தெரிகிறது.

அரசியலில் எதுவும் நடக்கலாம்.. எப்போதும் முடிவுகள் மாறலாம்.. என்ன மாதிரியாகவும் முடிவெடுக்கலாம் என்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்