வெறும் 300 ரூபாய்க்கு கட்சிக் கூட்டம்.. அதிர வைக்கும் 70ஸ் லிஸ்ட்!

Jul 20, 2023,09:23 AM IST
சென்னை: 1970களில் வெறும் 300 ரூபாய்க்கு ஒரு கட்சிக் கூட்டத்தை மதுரையில் நடத்தியதாக கூறி அது குறித்த பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் முன்னாள் திமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞரும், எழுத்தாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

ஒரு காலத்தில் திமுகவில் மிகவும் தீவிரமாக செயல்பட்டவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். திமுகவின் செய்தித் தொடர்பாளராக ஆக்டிவாக செயல்பட்டவர். பின்னர் வைகோவுடன் மதிமுகவில் இணைந்து செயல்பட்டார். பிறகு மீண்டும் திமுகவுக்குத் திரும்பினார். ஆனால் கடந்த ஆண்டு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். திமுக அரசின் செயல்பாடுகள், நாட்டு நடப்புகள், அரசியல் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் 70களில் ஒரு அரசியல் கூட்டம் எப்படி நடந்தது என்ற சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவில்,  இன்று பழைய கோப்புக்களை தேடுயும் போது 1970களில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அண்ணன் குடந்தை ராமலிங்கம் அவர்களின் கூட்டத்தை மதுரையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் நாங்கள் நடத்திய செலவு ரூ 300தான். மேடை, போஸ்டர், மைக்செட், அவர் காலேஜ் ஹவுஸ் விடுதியில் தங்கிய ரூம் வாடகை என எல்லா செலவுகள் இதில் அடங்கும்.

இன்று குவாட்டர், பிரியாணி, போக்குவரத்து வசதி,200 -500 ரூபாய்: வரை கொடுத்து  கூட்டத்திற்க்கு  வர கூவிக்கூவி அழைக்கும் கட்சிகள ...அன்று விளம்பரத்தை பார்த்து மக்கள் வந்து கூட்டம்.அன்று இரவு 12.00 மணி வரை இருப்பார்கள,

தமிழ்நாட்டின் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்ற போது தலைவர் கலைஞரை எதிர்த்��ு அண்ணன் குடந்தை ராமலிங்கம் காமராஜர் ஆசியை பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராக  சைதாப்பேட்டை சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டார்... என்று கூறியுள்ளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

அந்த லிஸ்ட்டைப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. அப்போது இருந்த விலைவாசியையும், செலவுகளைப் பார்த்துப் பார்த்து செய்ததையும், வீண் செலவுகளைத் தவிர்த்தையும், ஆடம்பரம் இல்லாமல் கூட்டங்களை எளிமையாக நடத்தியதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதிகபட்ச வீண் செலவு என்று பார்த்தால் கராத்தே சந்திரசேகரன் என்பவருக்கு 7 ரூபாய் செலவில் 2 பாக்கெட் கோல்ட்பிளாக் சிகரெட் வாங்கிக் கொடுத்துள்ளனர். இது ஒன்றுதான் வீண் செலவு. மற்றபடி செலவுகளைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

இன்று போல கவர்ச்சி நடனம் நடைபெறவில்லை, பிரியாணி வாங்கிக் கொடுக்கும் செலவு கிடையாது, இசைக் கச்சேரி நடக்கவில்லை,  ஆட்களை அழைத்து வர வாகனங்கள் கிடையாது, தலைக்கு இத்தனை என்று பணமும் கொடுக்கப்படவில்லை, தலைவர்களை அழைத்து வர பெரிய ஆடம்பரமான வசதிகளும் கூட செய்யப்படவில்லை போல. அத்தனை எளிதாக ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளனர்.சாதாரண காலேஜ்ஹவுஸ் ஹோட்டலில்தான் தங்க வைத்துள்ளனர். அது மதுரையில் மிகவும் எளிமையான ஹோட்டலாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது. 

அன்று இருந்த அதே காங்கிரஸும், திமுகவும் இன்றும் கூட இருக்கின்றன.. ஆனால் எப்படி மாறிப் போயுள்ளன பாருங்கள்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்