சென்னை: உலகெங்கும் பரபரப்பாக பரவி வரும் கிப்லி டிரெண்ட், நம்ம அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் விடவில்லை. அவரும் இந்த டிரெண்டில் இணைந்து படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக வலைதளத்தில் ஏதாவது ஒரு டிரெண்ட் வலம் வந்து கொண்டேதான் உள்ளது. அதுவும் இப்போது ஏஐ யுகமாச்சே.. ஏதாவது ஒன்று கிளம்பி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் வந்துள்ள புதிய டிரெண்ட்தான் கிப்லி ஆர்ட் படமாகும். இது ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது புகைப்படத்தைக் கொடுத்து கிப்லி ஆர்ட்டில் வரைந்து தருமாறு கேட்டால் அது அனிமேஷன் ஸ்டைலில் நமது புகைப்படத்தை மாற்றித் தரும்.
நமது புகைப்படத்தை சாட்ஜிபிடியில் கொடுத்து, இந்தப் புகைப்படத்தை ஸ்டூடியோ கிப்லி வரைபடமாக மாற்றித் தருமாறு கேட்டால் போதும். அது டக்கென நமது படத்தை அனிமேஷன் மாடலுக்கு மாற்றி வரைந்து கொடுக்கும். சாட்ஜிபிடி மட்டுமல்லாமல் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ள குரோக் மூலமும் கூட இதைப் பெறலாம். இது இலவச சேவை. எனவே மக்கள் புகுந்து விளையாடி வருகிறார்கள்.
அப்பா சாமிகளா எங்களைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்லையா, எங்களுக்கும் ஓய்வு தேவைப்பா.. என்று இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனர் சாம்ஆல்ட்மேனே புலம்பும் அளவுக்கு மக்கள் இந்த தொழில்நுட்பத்தை சரமாரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் இந்த டிரெண்ட்டில் இணைந்துள்ளார். தனது முக்கியமான சில புகைப்படங்களை இந்த ஆர்ட் மூலம் வரைந்து வாங்கி அதை தனது எக்ஸ் தளத்திலும் ஷேர் செய்து அசத்தியுள்ளார்.
விவசாயிகளுடன் இருப்பது, மருத்துவர்களுடன் இருப்பது, மழை வெள்ள பாதிப்பை முதல்வராக இருந்தபோது பார்வையிட்டது உள்ளிட்ட புகைப்படங்களை கிப்லி ஆர்ட் படங்களாக வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}