சென்னை: டாக்டர் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பாஜக அல்லாத மற்ற எந்த கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியும், பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்களுடன் கூட்டணி என்பது நேற்றும் இல்லை. இன்றும் இல்லை. நாளையும் இல்லை என்பதை பொதுச்செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி கிடையாது
2026ல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பலமுறை எங்கள் பொதுச்செயலாளர் கூறிவிட்டார். 2026 தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு கூட வெற்றி பெறும். அதிமுக என்பது தன்மானத்தோடு இயங்கும் இயக்கம். யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கட்சியின் பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவும் தான் தொடரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.டிடிவி தினகரன் தன் மீது உள்ள வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாஜகவிடம் சரணடைந்து விட்டார்.
அம்பேத்கர் புகழ் இந்தியா முழுவதும் போற்றப்பட வேண்டுமே தவிர, அவர் புகழை சிறுமைப்படுத்தக்கூடிய செயலை செய்யக்கூடாது. அம்பேத்கா் குறித்து அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்.
தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள்
தமிழகத்தில் தற்போது நிறைய பிரச்சனைகள் உள்ளன. நீட் பயம், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது, அரசு ஊழியர்கள் போராட்டம் என ஒட்டுமொத்தமாக தெனாலி படம் போல பயம், பயம் என்று சொல்லிவிட்டு ஸ்டாலின் பயமே உருவானவராக உள்ளார்.யார் பயந்து போயிருக்கின்றனர் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.
பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அப்பாயிமென்ட் கேட்டால் உடனே கிடைக்கிறது. அவர்கள் பாஜகவின் செல்லக்குழந்தைகள் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அம்பேத்கரை எப்படியெல்லாம் காங்கிரஸ் அவமதித்தது?.. பட்டியலிட்ட பிரதமர் நரேந்திர மோடி!
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அடடா மழைடா அடை மழைடா.. சென்னை, புறநகர்களில் காலை முதல் விடாமல் கொட்டித் தீர்க்கும் மித மழை..!
அம்பேத்கர் அம்பேத்கர்.. உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம்.. தவெக விஜய்
Pongal.. சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை.. இன்று முதல்.. ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில்!
புதுச்சேரியில்.. டிசம்பர் 28ம் தேதி பா.ம.க பொதுக்குழு கூட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தென்னிந்தியர்கள் தேவையில்லை.. நொய்டா நிறுவனத்தின் அறிவிப்பால்.. கொந்தளிக்கும் சோசியல் மீடியா!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு.. ஆர். அஸ்வின் திடீர் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
{{comments.comment}}