வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. டிசம்பர் 1ம் தேதி புயலாக மாறும்.. செம மழை இருக்கு!

Nov 27, 2023,07:46 PM IST


- மஞ்சுளாதேவி


சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது  அது உருவாகி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. 


தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து, மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிற 29ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.  அதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி இது புயலாக மாறும்.




மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 7 நாட்கள் அதாவது டிசம்பர் 2 தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்ப்பார்க்கலாம்.


அந்தமான் தீவுகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழையும் ,நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


இன்று மழை நிலவரம்:


கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்யக்கூடும்.


சென்னையைப் பொறுத்தவரை ,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. மிதமான மழை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கூட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்படவில்லை. அதேசமயம், நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் புறநகர்களில் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்