"என்னை மன்னிச்சிருங்க டாடி.. நாங்க பிரிஞ்சுட்டோம்".. ராஜ்கிரண் வளர்ப்பு மகள் கண்ணீர் வீடியோ!

Feb 01, 2024,05:08 PM IST

சென்னை: என்னை மன்னிச்சிருங்க டாடி...நாங்க பிரிஞ்சுட்டோம்... எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது என்று ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பிரியா அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா. சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜா என்பவரை 2022 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்துகொண்டார். நடிகர் முனிஷ் ராஜா சன்டிவியில் ஒளிபரப்பாகிய நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமானாவர். இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகி சித்தி சீரியலிலும் நடித்தவர். சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் நடித்தவர்.


முனிஷ் ராஜா- பிரியா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலுக்கு ராஜ்கிரண் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்ததது. இவர்கள் இருவரும் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள். நடிகர் ராஜ்கிரணும் இவர்கள் காதலை எதிர்த்து சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே.




இந்நிலையில், ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பிரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் பிரியா. ராஜ்கிரண் சார் வளர்ந்த பொண்ணு. நான் முனிஷ் ராஜா என்பவரை 2022ல் கால்யாணம் செய்தேன். அது உங்க எல்லாருக்கும் மீடியா மூலம் தெரிந்திருக்கும்.


எங்கள்  திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள்  பிரிந்து விட்டோம், பிரிந்து சில மாதங்கள் ஆகிறது. இந்த கல்யாணத்துக்கு அப்புறம் என்னை வளர்த்த டாடியை நான் ரொம்ப ஹர்ட் பண்ணீட்டேன். ஒன்னு இல்ல நெறையா ஹர்ட் பண்ணீட்டேன். உங்க கிட்ட எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னிச்சுடுங்க டாடி. நாங்க பிரிஞ்சுட்டோம்  என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்