டெல்லி: அதானி குழுமம் இந்தியாவில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள் என 200க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளைக் கொண்டுள்ளதாக போர்ப்ஸ் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அதானி இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபராக திகழ்கிறார். அவருக்கு மத்திய அரசின் முழுமையான ஆதரவு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ராகுல் காந்தியே கூட அதானியைக் குறி வைத்துத்தான் தொடர்ந்து பேசி வருகிறார்.
சமீபத்தில் அதானி குழுமத்தின் வளர்ச்சி குறித்து ஹின்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, கெளதம் அதானியை நிலை குலைய வைத்தது. உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் அவர் அதல பாதாளத்திற்குப் போய் விட்டார். அவரது நிறுவன பங்குகள் பெரும் சரிவைக் கண்டன. இருப்பினும் செபி தரப்பிலோ மத்திய அரசின் தரப்பிலோ அதானி தொடர்பாக பெரிய அளவில் எந்த ஆக்ஷனும் வரவில்லை.
இந்த நிலையில் அதானி குழுமம் இந்தியாவில் மிக முக்கிய தொழில் மையமாக மாறி வருவதாக போர்ப்ஸ் கூறியுள்ளது. இது அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அது வர்ணிக்கிறது. அதானி குழும நிறுவனங்களில் கிட்டத்தட்ட 26,000க்கும் மேற்பட்டோர் வேலை பார்ப்பதாக அது சொல்கிறது. இந்தியாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள், 9 மின் நிலையங்கள், 30 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகம், நிலக்கரி சுரங்கங்கள், சமையல் எண்ணெய், நெடுஞ்சாலைகள், எட்டு விமான நிலையங்கள் அதானி வசம் உள்ளதாம்
.
கடந்த ஆண்டு இந்தியாவின் 2வது மிகப் பெரிய சிமென்ட் உற்பத்தியாளராக அதானி குழுமம் உருவெடுத்தது. அம்புஜா சிமென்ட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்த நிலையை அதானி குழுமம் எட்டியது. மேலும் என்டிடிவியையும் அது வாங்கியது.
அதானி குழுமத்தின் வசம் 200க்கும் மேற்பட்ட துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் நிலையங்கள், சிமென்ட் ஆலைகள், சுரங்கங்கள், பாதுகாப்புத் தளவாட தொழிற்சாலைகள், மின்சார சாதன தயாரிப்பு நிறுவனகள், எரிவாயு சப்ளை கட்டமைப்புகள் உள்ளனவாம். 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் அதானியின் பரவல் இருப்பதாக போர்ப்ஸ் கூறுகிறது.
{{comments.comment}}