கால் வலி, கழுத்து வலி, மூட்டு வலி.. எல்லாத்தையும் போக்கும்.. முடவாட்டுக்கால் கிழங்கு சூப்!

Jul 04, 2024,05:03 PM IST

அந்தக் காலத்தில், உழைப்பு, ஆரோக்கியமான உணவு போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்றி மக்கள் நோயின்றி வாழ்ந்து வந்தனர். அப்போது வயதான பாட்டிகள் கூட கோலூன்றி நடப்பதில்லை. மிகவும் வலிமையாக இருந்தார்கள். ஆயிரம் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வார்Kள். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் 30 வயதிலேயே பெரும்பாலானோர் மூட்டு வலி, கை கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி, என பல நோய்களை சந்திக்க நேரிடுகிறது. 


இந்த கால மக்கள் உடல் உழைப்பு குறைந்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதன் காரணமாகவே இது போன்ற நோய்கள் நம்மளை முடக்கி விடுகிறது. இதனால் குறைந்த வயதிலேயே மக்கள் மூட்டு வலியால் நடக்க முடியாமல், உட்கார முடியாமல், படி ஏற முடியாமல், தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உடனடி தீர்வு கொடுப்பது முடவாட்டுக்கால் கிழங்கு தான். 


இதில் என்ன இருக்கிறது. இதனால்  என்ன பயன் என்று தானே கேட்கிறீர்கள். வாங்க பார்ப்போம் 


முடவாட்டுக்கால் கிழங்கு:




முடவன் ஆட்டுக்கால் என்பதை தான் முடவாட்டுக்கால் என அழைக்கின்றனர். ஏன் அவ்வாறு அழைக்கிறார்கள் தெரியுமா..? மூட்டு வலியால் எலும்புகள் பலம் இல்லாமல் தள்ளாடும் வயதிலும் இந்த முடவாட்டுக்கால் கிழங்கை சூப் செய்தோ அல்லது சாறு எடுத்தோ குடித்து வந்தால் கண்டிப்பாக மூட்டு வலி சரியாகும். அத்துடன் தசைப்பிடிப்பு, கர்ப்பப்பை சுருங்குதல் சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாகவும் செயல்படுகிறது. அதனால் தான் இதற்கு அப்படி ஒரு பெயராம்.  


இந்தக் கிழங்கை சைவ ஆட்டுக்கால் என அழைப்பதுண்டு. ஆட்டுக்கால் சூப் குடித்தால் எந்த அளவிற்கு சுவையும் நன்மையும் கிடைக்குமோ, அதே அளவிற்கு இந்த சைவ ஆட்டுக்கால்களிலும்  உண்டு. இந்தக் கிழங்கு மலை பகுதிகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளில் விளையக்கூடிய தாவர வகையாகும். பாறைகளில் உள்ள செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம் மற்றும் பாறைகளில் உள்ள சிலிக்கானையும் உறிஞ்சும் தன்மை கொண்டது இந்த முடவாட்டுக்கால் கிழங்கு. இது கொல்லிமலை மற்றும் ஏற்காடு பகுதிகளில் அதிகம் விளையக்கூடியவை.


இந்த முடவாட்டுக்கால் கிழங்கு ஆட்டுக்கால்களைப் போலவே தோற்றம் கொண்டிருக்கும். மேற்பரப்பு பரப்பில் கருப்பு நிற நார்கள் சூழ்ந்து காணப்படும். இதன் தோள்களை நீக்கிவிட்டு பார்த்தால் வெளிர்மஞ்சள் நிறத்தில் இஞ்சி போல் தோற்றம் இருக்கும். இதனை நாம் அப்படியே சாப்பிட முடியாது. இதனை சூப் செய்தோ அல்லது சாறு எடுத்தோ குடித்து தான் இதன் நன்மையை நாம் அடைய முடியும்.


சரி முடவாட்டுக்க்கால் கிழங்கு சூப் எப்படி செய்யலாம்?




தேவையான பொருட்கள்


முடவாட்டுக்கால் கிழங்கு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

இஞ்சி -1துண்டு

பூண்டு - 10 பற்கள்

புதினா, மல்லி - சிறிதளவு

தக்காளி - ஒன்று

சீரகம் - ஒரு ஸ்பூன்

மிளகு - ஒரு ஸ்பூன்

நல்லெண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்


முதலில் முடவாட்டுக்கால் கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில்  சின்ன வெங்காயம்,  ஒரு தக்காளி, புதினா மல்லி சிறிதளவு, மிளகு சீரகம்,  பூண்டு, இஞ்சி போட்டு அனைத்தையும் ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு பிரஷர் குக்கரை வைத்து அதில் ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதி வரவும் பொடியாக நறுக்கிய முடவாட்டுக்கால் கிழங்கை போட வேண்டும்.


பின்னர் மஞ்சள் தூள், அரைத்த விழுது, இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கொதி வரவும் மூடி வைத்து இரண்டு விசில் விடவும். விசில் அடங்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கவும். சுவையான ஆரோக்கியமான, உடம்புக்கு வலுவான சைவ ஆட்டுக்கால் சூப் தயார்.


இந்த முடவாட்டுக்கால் கிழங்கு  கிடைக்கும் நேரத்தில் இதனை தோல் நீக்கி, பொடியாக நறுக்கி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். நன்றாக இந்தக் கிழங்கு காய்ந்ததும் அதனை பவுடராக அரைத்துக் கொள்ளவும். தேவைப்படும்போது இந்த பொடியை சூப்பாகவும் அல்லது சாறாகவும் பருகலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்