- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: உண்ணும் உணவு நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது.. உடல் ஆரோக்கியத்திற்கு வித்திடுகிறது. ஆனால் எல்லாமே அளவுதான்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பார்கள்.
ஒரு காலத்தில் மனிதர்களுக்கு வேலைகள் அதிகம் இருந்தது. அதாவது உடல் உழைப்பு அதிகம் இருந்தது. இதனால் கரடு முரடாக சாப்பிட்டாலும் கூட அது ஜீரணித்து விடும். இதனால் அந்தக் காலத்து மனிதர்கள் முரட்டுத்தனமாக சாப்பிடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள்.
ஆனால் இப்போது அப்படியா உள்ளது.. லேசாக சாப்பிட்டாலே பலருக்கும் ஜீரணிப்பது கிடையாது. காரணம், நமது உடல் ஆரோக்கியம் அந்த அளவுக்கு தலைகீழாக மாறிப் போயுள்ளது. எனவே இன்றைய சூழல், வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றையும் மனதில் கொண்டுதான் நமது சாப்பாட்டு முறையும் இருக்க வேண்டியுள்ளது.
இதை பழமொழி வடிவில் நம்மவர்கள் அன்றே சொல்லி வைத்துள்ளனர். அப்போதும் அது அவர்களுக்குப் பயன்பட்டுள்ளது.. இப்போதும் அது நமக்குப் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. அதைப் பார்ப்போமா!
1. அவசர சோறு ஆபத்து
இன்றைய அவசர உலகில் மக்கள் அனைவரும் ஜெட் வேகத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாமே Fast...Fast...Fast... ஆகையால் நமக்கு நேரம் இருக்கும் போது நன்றாக பசி எடுத்தப்பின் வேலைக்கு செல்லும் முன் 20 நிமிடம் முன்பாகவே சாப்பிட வேண்டும். நன்றாக மென்று சாப்பிட வேண்டும். நமது ஜீரணசக்தி நன்றாக செயல்படும். இதை வலியுறுத்தும் வகையில்தான் அவசரம் அவசரமாக சாப்பிடாதே.. ஆற அமர நிதானமாக சாப்பிடு என்பதை அவசர சோறு ஆபத்து என்று சொல்லி வைத்துள்ளனர்.
2. இருமலை போக்கும் இஞ்சி, சீரகம், மிளகு
இம்மூன்றையும் அன்றாட சமையலில் பயன்படுத்த வேண்டும். இஞ்சி, சீரகம், மிளகு இவற்றுடன் கற்பூரவல்லி இலை 4 சேர்த்து சூப் வைத்து குடிக்க இருமல் போகும். இந்த மூன்றும் வீட்டில் இருந்தால் உடல் நலம் பற்றிக் கவலையே தேவையில்லை.
3. மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
நம் உணவில் அடிக்கடி வாழைப்பூ சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு என சமைத்து உண்ணும் போது மூலநோய் தீரும்.
4. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு
நாம் அடிக்கடி இந்த பழமொழியை சொல்வதுண்டு. ஆனால் இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
இது தான்!
ஞாயிறு, செவ்வாய், வியாழன் - இவை மூன்றும் சூரிய நாட்கள்.
திங்கள், புதன், வெள்ளி - இவை மூன்றும் சந்திர நாட்கள்.
சனி - பொது நாள்.
சந்திர நாட்களில் விருந்தும், சூரிய நாட்களில் மருந்தும், பொது நாளில் நீராடலையும் எடுத்துக் கொண்டனர் தமிழர்கள். இதைத் தான் விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்று கூறுவோம்.
உண்மையான அர்த்தம் புரிந்து விட்டது அல்லவா?
இன்னும் நிறைய பார்ப்போம்.. தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}