ஊட்டி: ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு சார்பில் மலர் கண்காட்சி மற்றும் நாய்கள் கண்காட்சி மே 10ம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக வெயில் சக்கை போடு போட்டு வருகிறது. இதனை மக்கள் சமாளிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டியில் தற்போது நல்ல சீதோசனம் நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது.
ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மக்களைக் கவரும் வகையில் அரசு சார்பில் மலர் கண்காட்சியும் தேசிய நாய்கள் கண்காட்சியும் நடைபெறும். கோடை காலத்தில் நல்ல குளுமையான சீசனை அனுபவிப்பது மட்டுமல்லாமல் அங்கு நடைபெறும் மலர் கண்காட்சியையும், நாய்கள் கண்காட்சியையும் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த வகையில் இந்த வருடம் மக்கள் கண்டு ரசிக்க ஏற்ற வகையில் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மே 10 முதல் பத்து நாட்கள் வரை மலர் கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 126 ஆவது மலர் கண்காட்சியாகும். இந்த மலர்க்காட்சியை மக்கள் கண்டு களிக்க பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, மே 10 முதல் தேசிய நாய்கள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 10ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இது 134 வது கண்காட்சியாகும். கண்காட்சியை காண வரும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க தகுந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
{{comments.comment}}