சென்னை: அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறையால் விமான பயணக் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளுதல், சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து, ரயில், விமானம் போக்குவரத்து ஆகியவற்றில் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்காக மக்கள் முன்டியடித்துக் கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இதை தொடர்ந்து விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ரயில் பயணங்களைப் போல இல்லாமல், விமானக் கட்டணங்கள் பயண காலத்திற்கேற்ப உயர்த்தப்படும், குறைக்கப்படும். தற்போது விடுமுறைக் கால கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து
தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கொச்சி, மைசூர் ஆகிய உள்நாட்டு விமான கட்டணங்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூர், தாய்லாந்து, துபாய்,துபாய் ஆகிய சர்வதேச விமான டிக்கெட் கட்டணங்கள் முன்னர் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு மடங்கு மட்டுமே உயர்ந்திருக்கும். ஆனால், தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கமாக சென்னை-தூத்துக்குடிக்கு ரூ.4,796 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.14,281க்கும், சென்னை-மதுரைக்கு வழக்கமாக ரூ.4,300 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.17,695க்கும், சென்னை-திருச்சி இடையேயான வழக்கமான கட்டணம் ரூ.2,382 ஆக இருந்தது, தற்போது ரூ.14,387க்கும், சென்னை-மைசூரு இடையேயான வழக்கமான விமான கட்டணம் ரூ.3,432 ஆக இருந்தது, தற்போது ரூ.9,872 ஆகவும், சென்னை- கோவை இடையே வழக்கமான கட்டணமாக ரூ.3,485 ஆக இருந்தது, தற்போது ரூ.9,418 ஆகவும், சென்னை-சேலம் இடையேயான வழக்கமான கட்டணமாக ரூ.3,537 ஆக இருந்தது, தற்போது ரூ.8,007 ஆகவும், சென்னை-திருவனந்தபுரும் இடையேயான வழக்கமான கட்டணமாக ரூ.3,821 ஆக இருந்தது, தற்போது ரூ.13,306 ஆகவும், சென்னை-கொச்சி இடையேயான வழக்கமான கட்டணமாக ரூ.3,678 ஆக இருந்தது, தற்போது ரூ.18,377 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், சர்வதேச விமான கட்டணங்களும் அதிகரித்துள்ளது. சென்னை-சிங்கப்பூர் இடையே வழக்கமாக ரூ.7,510 ஆக இருந்தது, தற்போது ரூ.16,861 ஆகவும், சென்னை-கோலாலம்பூர் இடையேயான வழக்கமான கட்டணமாக ரூ.11,016 ஆக இருந்தது, தற்போது ரூ.33,903 ஆகவும், சென்னை- தாய்லாந்திற்கு வழக்கமாக ரூ.8,891 ஆக இருந்தது, தற்போது ரூ.17,437ஆகவும், சென்னை-துபாய்க்கு வழக்கமாக ரூ.12,871 ஆக இருந்தது, தற்போது ரூ.26,752ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த கட்டண உயர்வை அரசு தலையிட்டு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருந்தவில்லை என்றால்..தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெங்களூரு அருகே.. கார் மீது விழுந்த கண்டெய்னர் லாரி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
ஜெயம் ரவி - ஆர்த்தி.. மீண்டும் மனம் விட்டு பேச்சு.. ஜனவரி 18ம் தேதிக்கு அடுத்த கட்ட விசாரணை!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு.. தொடர் விடுமுறை.. விமான டிக்கெட் பல மடங்கு உயர்வு... அதிர்ச்சியில் பயணிகள்
ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட்.. ஊழியர்களிடம் பிடித்த பிஎப் பணத்தை செலுத்தாமல் ஏமாற்றிய வழக்கில்!
வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. வானிலை மையம் தகவல்
மண்டல பூஜைக்கு அதிகரித்து வரும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள்.. இதுவரை 27 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!
இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் அட்டூழியம்.. கொலைவெறித் தாக்குதல்.. தமிழக மீனவர்கள் வேதனை!
Yearender 2024.. வருஷம் முடியப் போகுது.. இந்த ஆண்டை கலக்கிய டாப் 10 தமிழ்ப் படங்கள்!
{{comments.comment}}