Flashback 2023: ஜூலையில் அலற வைத்த தக்காளி.. டிசம்பரில் திகிலைக் கிளப்பிய மழை, வெள்ளம்!

Dec 31, 2023,05:33 PM IST

சென்னை:  2023ம் ஆண்டின் இறுதிப் பகுதியை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. குறிப்பாக வட தமிழ்நாடும், தென் தமிழ்நாடும் மறக்க முடியாத அளவுக்கு வெள்ளத்தில் மூழ்கடித்த ஆண்டுதான் 2023.


2023ம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.


ஜூலை : அலற வைத்த தக்காளி விலை




ஜூலை மாதத்தின் மிகப்பெரும் அதிர்ச்சியாக நாடு முழுவதும் தக்காளி கடுமையான விலை உயர்வை சந்தித்து பொதுமக்களை அலற வைத்தது. பெட்ரோல் விலையை விட தக்காளி விலை உயர்ந்ததால் மக்கள் பெரும் பாதிப்படைந்தனர். வீடுகள், ஹோட்டல்களில் தக்காளி சட்னி இல்லாத நிலையும் ஏற்பட்டது. பின்னர் தக்காளி விலை மெதுவாக குறைந்து நார்மலானது.


ஜூலை 2: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் ஆகஸ்ட் 6-ம் தேதி அக்குழந்தை பரிதாபமாக இருந்தது.


- மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்தது அஜித் பவார் தலைமையின் 36 எம்எல்ஏக்கள் கட்சி தாவி பாஜகவிற்கு சென்றனர். அஜித் பவார் துணை முதல்வர் ஆனார்.


ஜூலை 6: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஜூலை 7: கோவை சரக டிஐஜியாக இருந்து வந்த விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.


ஜூலை 15: மதுரையில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.


ஜூலை 18: முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பெங்களூரில் உடல் நலக்குறைவால் காலமானார்.


- பெங்களூரில் நடந்த இரண்டாவது எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது.


ஜூலை 20: பாஸ்மதி அல்லாத பிற அரிசி வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்ததால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நாடுகளில் அரிசிக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டு மூடை மூடையாக அள்ளிச் சென்ற பரபரப்பு சம்பவம் நடைபெற்றது.


ஜூலை 24: ட்விட்டர் சமூக வலைதளத்தின் பெயர் எக்ஸ் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.


ஜூலை 28: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார்.


ஜூலை 30: மறைந்த பேராசிரியர் நன்னன் எழுதிய புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.


ஜூலை 31: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த சேதன்சிங் என்பவர் தனது மேலதிகாரி உள்ளிட்ட மூன்று பேரை கொடூரமாக சுட்டுக் கொன்றார்.


ஆகஸ்ட்: தென் நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3




ஆகஸ்ட் 1: சென்னை அருகே கூடுவாஞ்சேரி பகுதியில் போலீஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடிகள் வினோத் மற்றும் ரமேஷ் ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


ஆகஸ்ட் 4: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் ஷபாஸ் ஷெரிப் அறிவித்தார்.


ஆகஸ்ட் 5: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


ஆகஸ்ட் 9: நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை என்ற தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் அரிவாளால் வெட்டப்பட்டார். அவரது சக மாணவரே இதைச் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவரின் தாத்தா மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்.


ஆகஸ்ட் 12: திருப்பதியில் மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி பலியானார்.


ஆகஸ்ட் 13: சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் இரண்டு முறை நீட் எழுதியும் தேர்வு பெற தகுதி தவறியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சியில் அவரது தந்தை செல்வ சேகரும் அடுத்த நாள் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஆகஸ்ட் 16: மதுரையில் மறைந்த பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி ரூபாய் 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.


ஆகஸ்ட் 22: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி .


ஆகஸ்ட் 23: நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரன் மூன்று விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் இறங்கி புதிய வரலாறு படைத்தது. 


ஆகஸ்ட் 26: நிலவில் சந்திரயான் 3 விண்கலம் இறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


ஆகஸ்ட் 28: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளை ஏலம் விட பெங்களூர் கோர்ட் உத்தரவிட்டது.


செப்டம்பர்: புரட்சிகரமான மகளிர் உரிமைத் திட்டம்




செப்டம்பர் 1: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.


செப்டம்பர் 2: சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இந்தியா.


- சனாதானத்தை ஒழிப்போம் என்று கூறி சென்னையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.


செப்டம்பர் 9: ஊழல் வழக்கில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 50 நாள் சிறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் அக்டோபர் 31ஆம் தேதி விடுதலை ஆகி வெளியில் வந்தார்.


செப்டம்பர் 9: டெல்லியில் ஜி 20 மாநாடு தொடங்கியது. 2 நாள் மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. தலைமை பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டது.


செப்டம்பர் 15: காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


செப்டம்பர் 17: நாமக்கல், பரமத்தி சாலையில் சவர்மா சாப்பிட்ட சிறுமி கலையரசி என்பவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


செப்டம்பர் 19: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா விஜய் ஆண்டனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


செப்டம்பர் 14: சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றார்.


செப்டம்பர் 19: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. காரசாரமான விவாதத்திற்கு பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 21ஆம் தேதி ராஜ்ய சபாவிலும் மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


செப்டம்பர் 23: உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள், அரசு மரியாதைகளுடன் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


செப்டம்பர் 24: சென்னை - திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.


செப்டம்பர் 25: பாஜக உடனான கூட்டணி முடித்துக் கொள்வதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


செப்டம்பர் 28: வேளாண் விஞ்ஞானி என்று புகழப்பட்ட எம் எஸ் சுவாமிநாதன் சென்னையில் காலமானார்.


அக்டோபர்: புதுச்சேரி சந்திர பிரியங்கா அதிரடி டிஸ்மிஸ்




அக்டோபர் 4 : சிக்கிமில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 22 ராணுவ வீரர்கள் மாயமானார்கள்.


அக்டோபர் 5: சென்னையில் ஆசிரியர்கள் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த போராட்டம் அக்டோபர் ஐந்தாம் தேதி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது


அக்டோபர் 8: இந்திய விமானப்படைக்கு புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது.


அக்டோபர் 10: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.


அக்டோபர் 14: சென்னையில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.


அக்டோபர் 17: ஒரே பாலின திருமணத்திற்கு சட்டசங்காரம் தர முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


அக்டோபர் 19: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனரான பங்காரு அடிகளார் காலமானார்.


அக்டோபர் 26: கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை சேர்ந்த முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு கோர்ட் உத்தரவிட்டது.


அக்டோபர் 25: சென்னையில் ஆளுநர் மாளிகை வெளியே கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீச முயன்று பிடிபட்டார்.


அக்டோபர் 29: கேரளாவில் நடந்த கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்ததில் இரண்டு பேர் பலியானார்கள். குண்டு வைத்த நபர் உடனடியாக காவல்துறையில் சரணடைந்தார்.


நவம்பர்:  உலுக்கி எடுத்த உத்தரகாண்ட் சுரங்க மீட்பு




நவம்பர் 2: தூத்துக்குடியில் காதல் மனம் புரிந்த மாரி செல்வம் - கார்த்திகா தம்பதியை கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


நவம்பர் 3: அமைச்சர் எ.வ.வேலு வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி வருமான வரித்துறை சோதனை மூன்று நாட்கள் நடைபெற்றது.


நவம்பர் 5: பெங்களூரில் அரசு அதிகாரி பிரதிமா என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது முன்னாள் கார் டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.


நவம்பர் 7: அதிமுகவின் பெயர் கொடி சின்னம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துவதற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.


நவம்பர் 9: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தடைச் சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சில பகுதிகளை மட்டும் திருத்த உத்தரவு.


நவம்பர் 12: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை தோண்டுவதற்காக சென்ற 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவில் சிக்கிக்கொண்டனர். 17 நாள் போராட்டத்திற்குப் பிறகு நவம்பர் 28ஆம் தேதி 41 பெரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


நவம்பர் 15: சுதந்திரப் போராட்ட வீரரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா சென்னையில் தனது 102 வது வயதில் மரணம் அடைந்தார்.


நவம்பர் 17: சென்னை குன்றத்தூர் பகுதியில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பிளஸ் ஒன் மாணவர் சந்தோஷ் தவறி கீழே விழுந்தில் அவரது இரண்டு கால்களும் நசுங்கி சேதமடைந்தன.


நவம்பர் 21: பின்னணிப் பாடகி பி சுசீலாவிற்கு சென்னை நுன்கலை பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.


நவம்பர் 22: திருச்சி அருகே பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்பவர் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.


நவம்பர் 23: முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி தனது 96 வது வயதில் கேரளாவில் வயோதிகம் காரணமாக மரணமடைந்தார். சுப்ரீம் கோர்ட்டின் முதல் முஸ்லீம் பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நவம்பர் 25: பிரதமர் நரேந்திர மோடி, தேஜஸ் போர் விமானத்தில் பறந்து புதிய சாதனை படைத்தார்.


நவம்பர் 27: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பெயரில் வெளியான வீடியோவால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. 


டிசம்பர்: மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்




டிசம்பர் 1: சட்ட மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டானுடன் பேச்சு நடத்துமாறு ஆளுநர் ஆர். என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை கூறியது.


- திண்டுக்கல்லில் அரசு டாக்டரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ரூபாய் மூன்று கோடி லஞ்சம் பேசி இருபது லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு காரில் தப்பிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


டிசம்பர் 3: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் தெலுங்கானா மாநிலத்தை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. ம.பியில் ஆட்சியை பாஜக தக்க வைத்தது. ராஜஸ்தான், சத்திஸ்கரில் ஆட்சியை காங்கிரஸிடமிருந்து கைப்பர்றியது. 


டிசம்பர் 13: நாடாளுமன்றத்தின் லோக்சபாவுக்குள் 2 வாலிபர்கள் உள்ளே புகுந்து வண்ணப் பொடிகளை தூவி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டனர்.


டிசம்பர் 14: தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் உடல் நலமின்றி, சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


டிசம்பர் 5: அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.


டிசம்பர் 8: நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


டிசம்பர் 11: தேமுதிக நிறுவன விஜயகாந்த் 23 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.


டிசம்பர் 12: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆந்திரா பக்தர்கள் நடத்திய கலாட்டாவில் காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.


- ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகர் ஆர் கே சுரேஷ் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.


டிசம்பர் 4: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்து பெருவெள்ளம் ஏற்படுத்தியது.


டிசம்பர் 18: கன மழை மற்றும் பெருவெள்ளம் பெருவெள்ளத்தில் சிக்கி திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்கள் கடுமையாக தத்தளித்தன. தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கிட்டத்தட்ட 950 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்ததால் கிராமங்கள் நீரில் மூழ்கின.


டிசம்பர் 19: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் பொன்முடி பதவி இழந்தார்.


டிசம்பர் 17: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


டிசம்பர் 20: அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட தடை விதித்து அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டது.


டிசம்பர் 28: தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மரணத்தைத் தழுவினார். தமிழகமே திரண்டு வந்து விஜயகாந்த்துக்கு இறுதி மரியாதை செலுத்தியது.


Flashback 2023: அதிரடி வெளிநடப்பு செய்த ஆர். என்.ரவி.. கதறி அழுத செந்தில் பாலாஜி.. மறக்க முடியுமா?

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்