Flashback 2023: டாப் 50 ஆசிய பிரபலங்கள்.. 8வது இடத்தில் விஜய்.. கமலுக்கும் இடம்.. ரஜினி, அஜீத்?

Dec 17, 2023,06:53 PM IST

டெல்லி: Top 50 Asian Celebrities in the World பட்டியலில் ஷாருக் கான் முதலிடத்தில் இருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து விஜய்க்கு 8வது இடமும், கமல்ஹாசனுக்கு 23வது இடமும் கிடைத்துள்ளன.


அதேசமயம், இந்தப் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத் ஆகியோருக்கு இடம் கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்தின் ஈஸ்டர்ன் ஐ வாரப் பத்திரிகை, உலகின் டாப் 50 ஆசிய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023ம் ஆண்டு நிறைவடைவதையொட்டி இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.  இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 


58 வயதாகும் ஷாருக் கான் இந்த ஆண்டு இரண்டு மெகா பிளாக்பஸ்டர் (பதான், ஜவான்) படங்களைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிறிஸ்துமஸுக்கு அவரது டங்கி வெளியாகவுள்ளது. 


முதல் 3 இடங்களையும் பாலிவுட் நடிகர் நடிகைகளை கைப்பற்றியுள்ளனர். நடிகை அலியா பட் 2வது இடத்திலும். பிரியங்கா சோப்ரா 3வது இடத்திலும் உள்ளனர். 




தமிழ்நாட்டிலிருந்து மொத்தமே 3 பேர்தான் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். தளபதி விஜய் 8வது இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு லியோ என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார் விஜய். இந்தியாவில் மட்டுமல்லாமல், இங்கிலாந்திலும் விஜய்க்கு தனிப் பெரும் ரசிகர் கூட்டம் இருப்பதால் அவருக்கு இந்த உயர்வு சாத்தியமாகியுள்ளதாக கூற்படுகிறது. அவரது மனைவி இங்கிலாந்தைச் சேர்ந்த இலங்கை வம்சவாளி பெண் என்பது நினைவிருக்கலாம்.


தீபிகா படுகோன் 19வது இடத்தில் இருக்கிறார். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 21வது இடம் கிடைத்துள்ளது.  அவருக்கு அடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு 23வது இடம் கிடைத்துள்ளது. கமல்ஹாசன் விக்ரம் படத்துக்குப் பிறகு செல்வாக்கு உயர்ந்து காணப்படுவதும் இதற்கு ஒரு காரணமாகும்.


தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் 25வது இடத்திலும்,  35 வது இடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் உள்ளனர். 


பிரபல பின்னணிப் பாடகி ஷிரேயா கோஷல் இந்தப் பட்டியலில் நடிகர் விஜய்க்கு முன்பு உள்ள்ளார். அதாவது 7வது இடத்தில் அவர் இருக்கிறார்.


இதெல்லாம் சரி நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத் ஆகியோருக்கு இந்தப் பட்டியலில் இடம் கிடைக்காதது ஏன் என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து வருகிறார். அவரது ஜெயிலர் மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது. அடுத்தடுத்து எதிர்பார்ப்புகளையும் அவரது படங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு இந்த 50 பேர் பட்டியலில் ஒரு இடம் கூட கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது.


ஈஸ்டர்ன் "ஐ".. ஒன்றரைக் கண்ணாக மாறி சர்வே நடத்தி விட்டதா!!


Flashback 2023: இந்த வருடத்தில்.. இந்தியர்களோட சாப்பாட்டு காம்பினேஷைப் பார்த்தீங்களா மக்களே..!

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்