செங்கல்பட்டு அருகே விபரீதம்.. படுவேகமாக வந்த கார் மோதி.. மாடு மேய்த்த 5 பெண்கள் பரிதாப மரணம்!

Nov 27, 2024,08:45 PM IST

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் கார் மோதி, சாலையோரம் மாடு மேய்த்து விட்டு அமர்ந்திருந்த 5 பெண்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த ஓ.எம்.ஆர் சாலையில் பண்டித மேடு பகுதியை சேர்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்து விட்டு சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி தாறுமாறாக வந்த கார், சாலையோரமாக மாடு மேய்த்து விட்டு அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் வரிசையாக அமர்ந்திருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 




சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் விபத்து எவ்வாறு நடந்தது என்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கார் மோதி பலியானது,  கெளரி, ஆனந்தி, விஜயா, லோகம்மாள், யசோதா என்பது தெரிய வந்தது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தை அடுத்து விபத்தில் இறந்த பெண்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கார் ஓட்டி வந்த இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீஸார் அவர்களிடமிருந்து அந்த நபரை மீட்டு கைது செய்து அங்கிருந்து கூட்டிச்  சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்