சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அக்கட்சி கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் ஜனநாயகன் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படம் நிறைவடைய இன்னும் 25 நாட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படமே தமிழ் சினிமாவிற்கு விஜயின் கடைசி திரைப்படம். இதனால் இப்படத்தை முடித்துவிட்டு இன்னும் 25 நாட்களில் தீவிரமாக அரசியலில் களம் காண இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு, விஜயின் சுற்றுப்பயணம், பொது குழு கூட்டம் என ஒவ்வொன்றாக நடத்தி முடித்து கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்த இருக்கிறார். முன்னதாக கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்தி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். அதேபோல் பரந்தூர் விசிட், தவெக முதலாம் ஆண்டு கொண்டாட்டம் என பல்வேறு வழிகளில் கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொண்டு தீவிரமாக களத்தில் இறங்கி உள்ள விஜய் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வியூகங்களை வகுத்து காய்களை நகர்த்தி வருகிறார்.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கலையரங்கத்தில் வரும் மார்ச் 28 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் கட்சியின் அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் விஜய் தலைமையில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இக்கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள கழகத் தலைவர் விஜய் அவர்களின் ஆலோசனைப்படி பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளதை அனைவரும் அறிவீர்கள். இந்த பொதுக்கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள கழகத் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் ஆலோசனைப்படி கீழ்க்கண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வரவேற்பு குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மை குழு, தொழில்நுட்பக் குழு, ஊடக மேலாண்மை குழு, உபசரிப்பு குழு என ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்களுக்குப் பொது உறுப்பினர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}