மீன் பிடி தடை.. தமிழ்நாட்டில் முடிந்தது.. கேரளாவில் தொடங்கியது.. சப்ளை பாதிப்பு.. விலையும் உயர்வு!

Jun 17, 2024,05:59 PM IST

சென்னை: மீன் பிடி தடைக்காலம் தமிழ்நாட்டில் முடிவடைந்த நிலையில் மீன்கள் அதிக அளவில் கிடைக்காத காரணத்தால் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதற்கிடையே கேரளாவில் தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது.


தமிழகத்தில் ஏப்ரல் 15 முதன் ஜூன் 14ம் தேதி வரை மீன்களின் இனபெருக்க வளர்ச்சி காரணமாக மீன்பிடி தடைகாலம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் ஆண்டு தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் ஏதும்  மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருக்கும்.  61 நாட்களுக்கு இந்த மீன் பிடித தடைக்காலம் நடைமுறையில் இருப்பதால், விசைப்படகுகள் கரையோரம் கட்டி வைக்கப்படும். இந்த ஆண்டிற்கான தடை காலம் தற்போது முடிவடைந்து விட்டது. 


இந்நிலையில், விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் தங்களுக்கு தேவையான ஐஸ் மற்றும் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஒரு சில படகுகள் ஒரு வாரமும்,  ஒரு சில படகுகள் ஒரு நாளிலும் கரை திரும்புவது வழக்கம். இதில் ஒரே நாளில் திரும்பும் படகுகள் மூலமாக பிடிக்கப்பட்ட மீன்கள் காசிமேடு மீன் சந்தையில்  நேற்று விற்பனை செய்யப்பட்டது. 




ஆனால்  எதிர்பார்த்த அளவுக்கு மீன் கிடைக்கவில்லை. இதனால் காசிமேடு சந்தையில் மீன் விலை அதிகமாக இருந்தது. விசைப்படகுகள் மூலமாக பிடிக்கப்படும் மீன்கள் காசிமேடு மீன் சந்தையில்  ஏலம் முறையில், மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏல விற்பனை  இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை நடைபெற்று வரும். இந்த விற்பனையில் சென்னை மற்றும் அதனை  சுற்றியுள்ள  பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் வாங்கி சென்று மீன் விற்பனை செய்து வருகின்றனர். 


விலையைப் பொருத்தவரை பெரிய வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1300க்கும், சிறிய வஞ்சிரம் கிலோ ரூ.600க்கும், வவ்வால் கிலோ ரூ. 600க்கும், கொடுவா கிலோ ரூ. 500க்கும், சங்கரா கிலோ ரூ.400க்கும், கடம்பா கிலோ ரூ. 450க்கும், இறால் கிலோ ரூ. 400க்கும், கானாங்கெளுத்தி கிலோ ரூ. 400க்கும், பாறை கிலோ ரூ. 600க்கும் என விற்பனை செய்யப்பட்டது.


இந்தநிலையில், அடுத்து கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவுக்கும் தமிழ்நாட்டிலிருந்து மீன் செல்லும். எனவே  தமிழ்நாட்டில் அதிக அளவில் மீன் கிடைத்தால்தான் சப்ளையை சரி செய்து விலையையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இல்லாவிட்டால் வரும் நாட்களில் மீன் விலை மேலும் உயரும் வாய்ப்பே அதிகம் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

10 வருடங்களுக்கு பிறகு‌‌.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!

news

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்

news

அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!

news

முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு

news

காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!

news

வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!

news

இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்