2024ல் வரும் முதல் சந்திர கிரகணம்.. இன்று.. 100 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் அபூர்வம்!

Mar 25, 2024,01:38 PM IST

டெல்லி: 2024 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று. பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகையில் வருவதால் இது அபூர்வமான சந்திரகிரகணமாக பார்க்கப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் ஏற்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் இது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்படும் சந்திரகிரகணம் இன்று. 2024ம் வருடத்தில் முதல் கிரகணம். சந்திர கிரகணம் என்பது ஒரு சிறப்பான அரிதாக வானில் ஏற்படும் நிகழ்வாகும். சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில் சூரியனின் நேரடி கதிர்கள் சந்திரனை ஒளிர விடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 




இந்திய நேரப்படி  காலை 10.23 மணிக்கு துவங்கி மாலை 3.02 வரை இந்த கிரகணம் இருக்குமாம். இந்தியாவில் இதனை பார்க்க முடியாது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் மட்டும் இதனை காண முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 


பங்குனி உத்திரம், ஹோலி பண்டிகையில் அன்று இந்த கிரகணம் வருகிறது. இது போன்ற கிரகணம் கடந்த 100 வருடங்களுக்கு முன்னர் தான் ஏற்பட்டது என்றும் விஞ்ஞானிகளில் தரப்பில் கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களில் பார்க்க கூடாது. அதேசமயம், சந்திர கிரகணத்தை வெறும் கண்களில் பார்க்க முடியுமாம். உயரமான இடங்களில் இருந்தும் மேகமூட்டம் இல்லாத நேரங்களிலும் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


இன்று வானில் தோன்றும் சந்திர கிரகணம் வழக்கமான சந்திர கிரகண நிகழ்வை விட  சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உயர் திறன் கொண்ட தொலை நோக்கியை வைத்தே இதை பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  ரிஷபம், கன்னி,  சிம்மம், தனுஷ் ஆகிய ராசியினர் கவனமுடம் இருக்க வேண்டும் என்று ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்