மத்திய பட்ஜெட் 2025: 8வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Feb 01, 2025,09:38 AM IST

டில்லி :  2025-2026 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இதில் என்னென்ன அறிவிப்புகள் வரும் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ம் தேதியான நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. மொத்தம் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 31ம் தேதி துவங்கி, பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 10ம் தேதி துவங்கி, ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும்.


நேற்று துவங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-2025ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது கடந்த 6 மாதத்திற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையாகும். லோக்சபா தேர்தலுக்கு முன்பு 2024ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி 2022-2023 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஏற்கனவே நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 




இந்நிலையில் இன்று காலை பட்ஜெட் உரையுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, பட்ஜெட் உரைக்கு ஒப்புதல் பெற்றார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து பார்லிமென்ட்டில் நிதித்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு லோக்சபாவில் தனது எட்டாவது பட்ஜெட் உரையை அவர் ஆற்ற உள்ளார்.  இதைத் தொடர்ந்து அவர் வாசித்த பட்ஜெட் உரை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். 


இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வேளாண் துணையில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படலாம். அதாவது ரூ.10 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதி செய்யப்படாத தகவல் என்றாலும் இது அதிகமானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் உரை தயார் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

அதிகம் பார்க்கும் செய்திகள்