டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது பட்ஜெட் இன்று தாக்கல் செய்த நிலையில் அவர் அணிந்திருந்த புடவை சூப்பரான மெசேஜை மறைமுகாக சொல்லியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதனால் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின் வரும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவே.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று தொடங்கிய இந்த கூட்டத் தொடரில் பொருளாதாரம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை ஏழாவது முறையாக தாக்கல் செய்தார்.
வழக்கம் போல சிம்பிளான புடவையில் வந்திருந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும், தங்க நிறத்தில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற துணியால் மூடப்பட்ட பாரம்பரிய பாஹி காட்டவுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தார். 2024 ஆம் தேதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, இன்று வெள்ளை நிறம் மற்றும் நீல நிற பார்டருடன் கூடிய கைத்தறி சேலையை அணிந்து வந்திருந்தார். இந்த வெள்ளை நிற புடவை அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் இருந்தது.
2023 ஆம் ஆண்டு யூனியன் பட்ஜெட் தாக்கலின் போது சிவப்பு நிறத்துடன் கருப்பு நிற கோவில் கோபுரம் போன்ற பார்டர் கொண்ட கசுதி நூல் வேலைப்பாடுகளுடன் கொண்ட புடவையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்தார்.
2022 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பழுப்பு நிற பிரவுன் கலரில் கைத்தறி சேலையை அணிந்திருந்தார். அந்த சேலை சிவப்பு மற்றும் பழுப்பு நிற பிரவுன் கலர் காம்பினேஷனில் இருந்தது.
2021 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் ஆந்திர மாநிலத்தில் பெயர் போன போச்சம்பள்ளி புடவையான சிவப்பு மற்றும் வெள்ளை நிற காம்பினேஷனில், பல்லு பச்சை நிற பார்டரில் இருக்கும் அழகிய சேலையை அணிந்திருந்தார்.
2020 ஆம் ஆண்டு மங்களகரமான மாம்பழ நிறத்தில் ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையை அணிந்திருந்தார். மஞ்சள் நிறம் மங்களகரமாக இருக்கும் என்பதை இது உணர்த்துவதாக அமைந்திருந்தது.
2019 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் கோல்டன் பார்டர் இல் சிவப்பு மற்றும் பிங்க் காம்பினேஷன் மங்கலகிரி புடவையை அணிந்திருந்தார். இதுவும் ஆந்திர மாநிலத்தில் பிரபலமான சேலை வகை ஆகும. இது இவருக்கு முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்ட ஏழு பட்ஜெட்டிலும் அணிந்து வந்த புடவைகள், இவரின் எளிமையும் பாரம்பரியமான கைத்தறி ஆடையின் மகத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}