தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு.. சென்னையில் பெரும் சரிவு.. தர்மபுரியில் உச்சம்!

Apr 20, 2024,05:07 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.46 சதவீத வாக்குகள் தமிழ்நாட்டில் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது கடந்த 2019 தேர்தலில் பதிவானதை விட 3 சதவீதம் குறைவாகும்.

தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளன. கிராமப்புற வாக்காளர்கள்தான் பெருமளவில் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். சென்னை நகரில் உள்ள  3 தொகுதிகளிலும் கடந்த முறையை விட இந்த முறை அதிக அளவிலான வாக்குகள் பதிவானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மகா மோசமான முறையில் அங்கு வாக்குப் பதிவு சரிந்து போயிருப்பது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமப்புறங்களில் நல்ல ஆதரவு.. நகர்ப்புறங்களில் மந்தம்



எத்தனையோ விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கூட நகர்ப்புற வாக்காளர்கள் ஏன் வாக்களிக்கத் தவறினர் என்பது வேதனை கலந்த கேள்வியாக எழுந்துள்ளது. மிகப் பெரிய அளவில் தேர்தல் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் நிலவுவதாக கூறப்பட்ட நிலையிலும் கூட, கடந்த முறை வந்த அளவு கூட இல்லாத அளவுக்கு, 70 சதவீதத்தைக் கூட தொடாத அளவுக்கு வாக்குப் பதிவு சதவீதம் குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி தொகுதியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் நேற்று 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் இரவு ஏழு மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது இறுதி வாக்குப்பதிவு விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

முன்னதாக வெளியான தகவலின் படி சென்னையில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது கடந்த ஆண்டை விட கடந்த தேர்தலை விட இந்த முறை சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் அதிக அளவில் வாக்குப்பதிவு இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிலும் தென் சென்னையில் 10 சதவீதம் கூடுதல் வாக்குகள் பதிவானதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள இறுதிப் பட்டியலின்படி சென்னையில் குறைந்த அளவிலான வாக்குகளை பதிவாகியுள்ளன.

சென்னையில்தான் குறைந்த வாக்குப் பதிவு

தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுதான் தமிழ்நாட்டிலேயே மிகவும் குறைந்தபட்ச வாக்குப்பதிவு ஆகும். தென் சென்னையில் 54.27, வட சென்னையில் 60.13 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன. தர்மபுரி தொகுதியில்தான் தமிழ்நாட்டிலேயே  அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. அதாவது 81.48 சதவீத வாக்குகள் அங்கு பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலிலும் தர்மபுரியில் தான் அதிக அளவில் வாக்குகள் பதிவானது. ஆனால் கடந்த தேர்தலை விட இந்த முறை இரண்டு சதவீத வாக்குகள் தர்மபுரியில் குறைவாகவே பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக வாக்குகள் பதிவான தொகுதிகள் என்று பார்த்தால் 70 சதவீதத்திற்கு மேல் பதிவான தொகுதிகள் விவரம்:

காஞ்சிபுரம் (தனி) 71.5
அரக்கோணம் 74.08
வேலூர் 73.42
கிருஷ்ணகிரி 71.31
திருவண்ணாமலை 73.8 
ஆரணி 75.65
விழுப்புரம் 76.47 
கள்ளக்குறிச்சி 79.25
சேலம் 78.13 
நாமக்கல் 78.16
ஈரோடு 70.54
திருப்பூர் 70. 58
நீலகிரி (தனி) 70.93
பொள்ளாச்சி (தனி) 70.70 
திண்டுக்கல் 70.9
கரூர் 78.61
பெரம்பலூர் 77.37
கடலூர் 72.28
சிதம்பரம் (தனி) 75.32 
மயிலாடுதுறை 72.06
நாகப்பட்டினம் (தனி) 71.5 
விருதுநகர் 70.17

70 சதவீதத்திற்குக் கீழ் பதிவான தொகுதிகள்:

திருவள்ளூர் (தனி) 68.31
வடசென்னை 64 
ஸ்ரீபெரும்புதூர் 60.21 
கோயம்பத்தூர் 64.81 
திருச்சிராப்பள்ளி 67.45 
தஞ்சாவூர் 68.18 
சிவகங்கை 63.94 
மதுரை 61.92 
தேனி 69.87 
ராமநாதபுரம் 68.18 
தென்காசி (தனி) 67.5 
திருநெல்வேலி 64.10 
கன்னியாகுமரி 65.46 

60 சதவீதத்திற்கும் கீழ் பதிவான தொகுதிகள் 

சென்னை 54.27 
மத்திய சென்னை 53.91 
தூத்துக்குடி 59.96

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்