ஈரோடு கிழக்கு தொகுதி.. வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.. முதல் ஆளாக பத்மராஜன் மனு செய்தார்!

Jan 10, 2025,08:20 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு  தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.  முதல் ஆளாக தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.


2021ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இவர் 2023ம் ஆண்டு காலமானார். அதன்பின்னர்  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக  இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்  சமீபத்தில்,  உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். 


இந்நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17ம் தேதியாகும். 




இன்று முதல் ஆளாக தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.  வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு மாநகராட்சி வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன்  கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


வேட்பு மனுக்களைதேர்தல் நடத்தும் மணீஸ்சிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 13 மற்றும் 17ம் தேதிகளில் மட்டும் வேட்புமனுக்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட மற்ற நாட்கள் அனைத்தும் அரசு விடுமுறை நாட்களாகும். 18ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்புமனுவை திரும்ப பெற 20ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்