"என் கண்ணீருக்கு ஆறுதல் நீ".. மகள் குறித்து உருகிய விஜய் ஆண்டனி மனைவி!

Sep 21, 2023,05:11 PM IST
சென்னை: என் கண்ணீருக்கு ஆறுதல் என் தங்க குட்டி... செல்ல குட்டி.. என் மகள்  என்று உருக்கமாக விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா முன்பு பதிவிட்டது இப்போது உருக்கமாக பகிரப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் இந்த டிவீட்டைப் போட்டிருந்தார் பாத்திமா விஜய் ஆண்டனி. அதில் மீரா பள்ளிச் சீருடையில் கம்பீரமாக காட்சி தருகிறார். ஸ்கூல் கேப்டன் பொறுப்பேற்ற பிறகு எடுத்த புகைப்படம் இது.

சிரித்த முகத்துடன் அழகாக காட்சி தரும் மீராவைப் பாராட்டி பதிவிட்டிருந்தார் பாத்திமா. அதில், "என் வலிமைக்கு பின்னால் இருக்கும் சக்தி, என் கண்ணீருக்கு ஆறுதல்.. (குறும்புத்தனங்களால்) என் மன அழுத்தத்திற்கு மருந்தாகும் செல்ல குட்டி, தங்க குட்டி ... மீரா விஜய் ஆண்டனி என பதிவிட்டிருந்தார். பாத்திமா விஜய் ஆண்டனி தனது மகள் மீராவை பள்ளியின் மாணவர் சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக  பாராட்டி இதனை பதிவிட்டு இருந்தார். 



இவருடைய இந்தப் பதிவு தற்போது மீராவின் மரணத்திற்குப் பிறகு பார்க்கும் ஒவ்வொருவரையும் அழ வைத்துள்ளது.  பார்ப்போரை கண் கலங்க செய்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய இசையில்  பாடல்களுக்கு தனி சிறப்பு உண்டு. இவர் இசையமைப்பில் வெளியான நாக்க முக்க, ஆத்திச்சூடி பாடல்கள் ,
வேட்டைக்காரன் மற்றும் வேலாயுதம் படங்களில் உள்ள பாடல்களுக்கு வித்தியாச வித்தியாசமான முறையில் இசையமைத்து ரசிகர்களை ஈர்த்தார். இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது. பின்னர் நான் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது கடைசியாக பிச்சைக்காரன் 2 வில் நடித்தார்.

விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா. இவர்களுக்கு மீரா மற்றும் லாரா என்ற இரு மகள்கள் உண்டு . மீரா பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.இவருக்கு வயது 16 . பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவி இருப்பினும் மீரா கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் .இவருடைய இழப்பு விஜய்  ஆண்டனி குடும்பத்தை நிலை குலையச் செய்துள்ளது. திரையுலகினரும் சோகத்தில் உள்ளனர். தமிழ்நாட்டு மக்களுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.



தற்கொலை என்பது கோழைத்தனமானது

எந்த ஒரு செயலுக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். மாணவ மாணவிகள் என யாராக இருந்தாலும் தனக்கு பிடித்தவர்களிடம் மனவிட்டுப் பேசுங்கள். மனதில்  எல்லாவற்றையும் திணிக்காதீர்கள். நம் மனதில் இருந்த எண்ணங்கள் யாவையும் ஒரு குப்பை போல எண்ணி தூக்கி வீசி எறிந்தால் மட்டுமே மனம் தூய்மை பெறும். அதனால் நம் மனதில் உள்ள தீய எண்ணங்களால் மன அழுத்தம் வராது. 

வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறை தான் அதை வாழ்ந்துதான் பார்ப்போம் என்று சபதம் கொள்ளுங்கள். வாழ்க்கை சிறப்பாக அமையும்.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்