மறைந்தார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்!

Sep 28, 2023,02:02 PM IST

சென்னை: இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான 98 வயதான எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். 


எம்எஸ் சுவாமிநாதன் கும்பகோணத்தில் 1925ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை மருத்துவர். 1942ம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் இவரது மனதை பாதித்தது. இதனால் வேளாண்துறையை தேர்வு செய்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் விளைவுதான் எதிர்காலத்தில் இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு இவர் வித்திட வாய்ப்பாக அமைந்தது.




கோவையில் இளநிலை பட்டமும், டெல்லியில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர்  பல ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.


இந்தியாவில் கோதுமை புரட்சிக்கும், பசுமை புரட்சிக்கும் வித்திட்டவர்களுள் முதன்மையானவர் எம் எஸ் சுவாமிநாதன். வேளாண் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர். உணவுப் பொருட்களை நம் நாட்டில் வித்திட செய்து உணவுபொருட்களின் இறக்குமதியை குறைந்தவர். பட்டினி இல்லாத இந்தியாவை உருவாக்க எண்ணியவர் இவர்.


கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வால்வோ விருது, ராமன் மகசேசே விருது, பத்ம விருதுகள் உள்ளிட்ட 40க்கும் ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார் எம்.எஸ். சுவாமிநாதன். உலகில் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.


தலைவர்கள் இரங்கல்


மறைந்த இவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


எம்.எஸ். சுவாமிநாதனின் மகள்தான் உலக சுகாதார நிறுவன அதிகாரியான சவுமியா சுவாமிநாதன். கொரோ பரவல் காலகட்டத்தில் சவுமியாவின்  செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்