சென்னை: தாம்பரம் அருகே தனது 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கேட்போரின் மனங்களை பதைபதைக்க வைத்துள்ளது.
பாலியல் அத்துமீறல்கள், வன்மச் செயல்கள், வக்கிரச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. யார் எவர், வயது வித்தியாசம், என்று எந்த விவஸ்தையும் இல்லாமல் இதுபோன்ற அக்கிரமச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது மக்களை அதிர வைத்துள்ளது. இந்த நிலையில் பெற்ற தந்தையே தனது மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து சிக்கியுள்ளார். என்ன கொடுமை என்றால் அந்தக் குழந்தைக்கு வயது 5தான்.
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் சௌந்தரராஜன். இவருக்கு வயது 37. இவருக்கு ஏழு வயது மற்றும் ஐந்து வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று சௌந்தர்ராஜன் தனது ஐந்து வயது இளைய மகளை குளிக்க வைத்துள்ளார். அப்போது எதேச்சேயாக பாத்ரூமுக்கு வந்த மனைவி, தனது கணவர் மகளிடம் தவறுதலாக நடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போதுதான், குளிக்க வைக்கும்போதெல்லாம் இந்த வக்கிரச் செயலில் கணவர் ஈடுபட்டு வந்தது தெரிய வந்து வேதனைக்குள்ளானார் மனைவி. அத்தோடு நிற்காமல், தனது கணவர் குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சௌந்தரராஜனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் தான் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறுமிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய சம்பவமும் நெஞ்சை நெகிழ வைத்தது என்பது நினைவிருக்கலாம்.
மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்து என்ன பயன். என்றைக்கு பெண்கள் தனியாக.. சுதந்திரமாக .. பாதுகாப்பாக.. வெளியில் சென்று வீடு திரும்புகிறார்களோ அன்றைக்குதான் சுதந்திரம்.
இதற்கிடையே, கடந்த மாதம் 30ஆம் தேதி வால்பாறையில் கல்லூரி மாணவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கில் கைதான மூன்று பேராசிரியர்கள் சஸ்பென்ஸ் செய்யப்பட்டு இன்று பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
{{comments.comment}}