உங்களை பார்க்க நானே வருகிறேன்...லாரன்ஸ் அசத்தல் அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Feb 24, 2024,04:31 PM IST

சென்னை: ரசிகர் ஒருவர் இறந்ததை அடுத்து, தனது ரசிகர்கள் தனக்காக பயணம் செய்யக்கூடாது. அவர்களுக்காக தான் பயணம் செய்து அவர்களின்  ஊரிலேயே போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் உணர்ச்சி பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் நாளை விழுப்புரம் யோகலட்சுமி மஹாலில் ரசிகர்களுக்காக முதல் முதலாக போட்டோ ஷூட் தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் சிறந்த  நடிகராகவும், நடன இயக்குனராகவும், நடன அமைப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அம்மாவின் மீது கொண்டுள்ள அதீத அன்பால் இவர் அம்மாவுக்கு சிலை வைத்து வணங்கி வருகின்றார். இது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனது டிரஸ்ட் மூலம் உதவியும் செய்தும் வருகிறார். கடைசியாக இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஹிட்  கொடுத்தது. இதனை அடுத்து நிறைய வாய்ப்புகள்  லாரன்ஸ்சுக்கு வரத் தொடங்கியுள்ளன. 




இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளதாகவும், விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத்தவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.


தமிழ் நடிகர்களுடன் இணைந்து போட்டோ எடுப்பதற்காக பல ரசிகர்கள் சென்னைக்கு வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கடலூரை சேர்ந்த சேகர் என்ற ரசிகர் ஒருவர்  லாரன்ஸுடன் போட்டோ சூட் எடுப்பதற்காக சென்னை வரும் வழியில் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த ராகவா லாரன்ஸ் இறந்த ரசிகரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, தன்னை யாரும் பார்க்க வர வேண்டாம். தானே நீங்கள் உள்ள இடத்திற்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.  இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், வணக்கம் .. நண்பர்களே.. ரசிகர்களே.. கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் போட்டோ ஷூட் சந்திப்பின்போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இது மிகவும் மன வேதனையாக இருந்தது. என் ரசிகர்கள் எனக்காக பயணம் செய்யக்கூடாது. அவர்களுக்காக நான் பயணம் செய்து அவர்களின் ஊரில் போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்துள்ளேன். நாளை முதல் தொடங்குகிறேன். முதல் இடம் விழுப்புரம் யோகலட்சுமி மஹாலில் உள்ளது. நாளை சந்திப்போம் என லாரன்ஸ் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்