டெல்லி: மத்திய அரசு தனது ஊழியர்களின் வயதை 62 ஆக உயர்த்தியிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல என்று தெரிய வந்துள்ளது.
உண்மை போலவே இப்போது பொய்ச் செய்திகளும் வேகமாக பரவி வருகின்றன. நம்பக் கூடிய வகையில் அவை வருவதால் பெரும்பாலான மக்கள் அதை நம்பி விடுகிறார்கள். அப்படி ஒரு செய்திதான் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியானது.
சமூக வலைதளங்களில்இதுதொடர்பாக ஒரு அரசாணை உத்தரவு வலம் வந்து கொண்டுள்ளது. பலரும் இதை வேகமாக பரப்பி வருகிறார்கள். குறிப்பாக பல்வேறு குரூப்களில் இது பரப்பப்படுகிறது. ஆனால் இந்தத் தகவல் தவறானது என்று தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு அப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை, உத்தரவும் போடப்படவில்லை. இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு தனது ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கவில்லை. உண்மையில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில், அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் பரிசீலனையிலேயே இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் தவறானது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுத் தரப்பிலும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செய்தி அறிக்கையும் தரப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. எனவே ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டதாக வந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}