நைட் தூக்கம் வராமல் புரள்றீங்களா.. கம்மியா தூங்கறீங்களா?.. அப்போ இது உங்களுக்கு தான்!

Jan 22, 2024,06:57 PM IST
டில்லி : ஒரு மனிதன் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் இரவில் தூங்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இன்றைய அவசரமான, பதற்றம் நிறைந்த கால கட்டத்தில் இரவு தூக்கம் என்பது பலருக்கும் குறைந்து விட்டது. இதற்கு பல விதமான காரணங்கள் உள்ளது.

ஆனால் நீங்கள் இரவில் முறையாக தூங்கவில்லை என்றாலோ அல்லது குறைவான நேரம் தூங்கினாலோ உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் அல்லது தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம் என சொல்லப்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான நிலை என்றும் சொல்லப்படுகிறது.



தூக்கமின்மை நிலையை insomnia என்பார்கள். இது இன்றைய கால கட்டத்தால் சாதாரண உடல் ரீதியான பிரச்சனையாகவும், மூன்றில் ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இரவில் சரியாக தூங்க முடியாத நிலை இருந்தால் அது இதய நோய்கள், சர்க்கரை நோய், பக்க வாதம், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மன அழுத்தம் போன்ற உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

தூக்கமின்மையால் 70 சதவீதம் பாதிக்கப்பட்டால் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என சொல்லப்படுகிறது. குறைந்த நேரம் உறங்குபவர்கள் குறிப்பாக பெண்கள், 5 அல்லது அதற்கும் குறைவான நேரம் தூங்கினால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். தூக்கம் குறைவதால் உடல் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு, ரத்தம் அழுத்தம், மன அழுத்தம் அதிகரிப்பது க்ளுகோசின் அளவு சமநிலை இழப்பது போன்றவை ஏற்பட்டு, அது இதய வால்வுகளை பாதிக்க செய்கிறது. தூக்கம் குறைவதால் இதய துடிப்பின் அளவு அதிகரிக்கிறது. இது மன அழுத்தத்தையும் அதிகரிக்க செய்கிறது.

மனஅழுத்தம் அதிகரிப்பதால் உடலில் ஹார்மோன் அளவும் பாதிக்கப்பட்டு, இதய தமனிகளை கடினமாக செய்யும். இது மாரடைப்பில் கொண்டு போய் விடும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தூக்கமின்மை காரணமாக ஆண்களுக்கு 103 சதவீதமும், பெண்களுக்கு 124 சதவீதமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது. நான்கில் ஒரு பெண்ணும், ஐந்தில் ஒரு ஆணும் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 



நல்ல தூக்கம் வர என்ன செய்யலாம்?

* உங்களின் படுக்கை அறையில் தூக்கத்தை கெடுக்கும் வெப்பநிலை, விளக்குகள், சத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* டிவி, போன் பார்ப்பதை தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக நிறுத்தி விடுங்கள்.

* தூங்குவதற்கு முன் அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள்.

* தூங்குவதற்கு முன் காபி, டீ போன்ற காஃபின் கலந்த பானங்களை குடிப்பதை தவிருங்கள்.

* இரவில் ஓய்வெடுப்பதற்கு போதுமான நேரத்தை ஒதுக்குங்கள்.

* தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* உங்களின் மனநிலையிலும் கவனம் செலுத்துங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்