முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் காலமானார்

Feb 28, 2024,10:15 AM IST

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன், இலங்கை திரும்ப தயாராகி வந்த நிலையில்,  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.


கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிக்கிய ராபர்ட் பையஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் இந்த 7 பேருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டு  தீர்ப்பு வழக்கப்பட்டது. இவர்கள் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 




தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.  இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் இலங்கை தமிழ் ஆதரவு அமைப்புகளின் முயற்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் ஒருவரான  இலங்கையைச் சேர்ந்த சாந்தன் என்பவர் இன்று காலை 7.50 மணியளவில் உயிரிழந்தார். 


இலங்கையை சேர்ந்த சாந்தன் சொந்த நாடு திரும்ப முடியாமல் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார் விடுதலைக்குப் பிறகு, சொந்த நாட்டிற்கு செல்ல நினைத்த சாந்தன் மத்திய அரசிற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு இலங்கை செல்ல அனுமதி அளித்திருந்த நிலையில், திடீர் என கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 


அதனை தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த 1 மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்