சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவிற்கு அனைத்து கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் 75 இன்று காலமானார். அவருக்கு வயது 75. ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இளங்கோவன் கடந்த ஒரு மாத காலமாக சென்னையில் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று நுரையீரலில் சளி அதிகமாக இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை இளங்கோவன் காலமானார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில், அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் மறைவிற்கு, காங்கிரஸ் கமிட்டி கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரழிப்பு. தனிப்பட்ட முறையில் அவரது மறைவு தனக்கு மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
இது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை எனது சிறு வயதிலிருந்தே எனக்குத் தெரியும். என்னை ஒருமையில்தான் உரிமையோடு அழைப்பார். அப்பா கட்சியில் சேராமல் பாஜகவில் சேர்ந்தது ஏன் என்று கூட என்னிடம் உரிமையோடு கேட்டவர் அவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன் இரங்கல்
இது குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறுகையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான அண்ணன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது.தனிப்பட்ட முறையில் என்மீது மிகுந்த பற்றுதலைக் கொண்டிருந்தவர். அவ்வப்போது தொடர்பு கொண்டு என்னை ஊக்கப்படுத்தியவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமானஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நான் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போது பல்வேறு துறைகளில் இணைய அமைச்சராக பணியாற்றியவர் இளங்கோவன். என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். ஒரு மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்த்து இருந்த வேலை அவரது மறைவு செய்தி மனதை வாட்டுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும் அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சில காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகத் துயரம் அடைந்தேன். இளங்கோவன் அவர்கள் கட்சித் தொண்டர்களின் அன்பும் ஆதரவும் பெற்றுப் பரபரப்பாகக் கட்சிப் பணியாற்றியவர். அவர் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். காங்கிரஸ் கட்சிக்குச் சோதனை வந்த காலங்களில் உறுதியாக நின்றவர்.
அவர் நல்ல பேச்சாளர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவு. அவருடைய மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் மனப்பூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைவதாக என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}