மீளாமலேயே காலமான கணேசமூர்த்தி.. சோகத்தில் ஈரோடு.. தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி

Mar 28, 2024,07:17 PM IST

ஈரோடு: ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.


நாடாளுமன்ற உறுப்பினரான கணேசமூர்த்தி மதிமுக வின் பொருளாளராக பதவி வகித்து வந்தார். 1983 ஆம் ஆண்டு வைகோ திமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர்களில் ஒருவர். அன்று முறை வைகோவுடனேயே இருந்து வந்தார். கடந்த2009 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 




இவருக்கு வரும் லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியால், கடந்த மார்ச் 24ஆம் தேதி சல்பாஸ் என்னும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக எம்பி கணேசன் மூர்த்தியை  ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர் . இதனைத் தொடர்ந்து அவருக்கு சமீப காலமாக மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 


மருத்துவக் கண்காணிப்பில் இருந்த எம் பி கணேசன் மூர்த்திக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அவசரப்பட்டு விட்டார் கணேசமூர்த்தி என்று வைகோ வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கணேசமூர்த்தி காலமானார்.


கணேசமூர்த்தியின் மறைவு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின்  தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு சேசிங் சோதனை.. பஞ்சாபிடமிருந்து வெற்றியைப் பறிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்!

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்