ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத் தேர்தல்.. அறிவித்தது தேர்தல் ஆணையம்

Jan 07, 2025,06:01 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நடைபெறவுள்ளது.


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 2021ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  திருமகன் ஈவேரா வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இவர் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். ஆனால் திருமகன் ஈவேரா திடீர் மரணமடையவே, கடந்த 2023ம் ஆண்டு அங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இந்த நிலையில் சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அங்கு மீண்டும் இடைத் தேர்தல் வந்துள்ளது. இடைத் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லி சட்டசபைத் தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.


தேர்தல் அட்டவணை:




வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: ஜனவரி 10

மனுத் தாக்கலுக்கு கடைசி நாள்: ஜனவரி 17

மனுக்கள் பரிசீலனை: ஜனவரி 18

மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஜனவரி 20

தேர்தல் நாள் : பிப்ரவரி 5

வாக்கு எண்ணிக்கை: பிப்ரவரி 8



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொய்யைப் படிக்க வேண்டாம் என்பதால் வெளியேறிப் போயிருக்கலாம்.. ஆளுநருக்கு சீமான் ஆதரவு

news

ஈரோடு கிழக்கு தொகுதி.. திமுகவுக்கா அல்லது காங்கிரசுக்கா? .. காத்திருக்கும் வி.சி. சந்திரகுமார்

news

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? .. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

news

அதிமுகவைப் பார்த்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

news

தண்டனை (சிறுகதை)

news

Gold rate.. கடந்த 3 நாட்களாக அமைதிகாத்த தங்கம் விலை... இன்று திடீர் உயர்வு...!

news

திமுக போராடினால் வழக்கு.. பாமக போராடினால் கைதா? .. ஆஹா.. நல்லா இருக்கே .. டாக்டர் அன்புமணி

news

ISRO.. கன்னியாகுமரியிலிருந்து.. இன்னொரு இஸ்ரோ தலைவர்.. யார் இந்த வி. நாராயணன்?

news

அண்ணாநகர் பாலியல் வழக்கு.. அதிமுக செயலாளர் அதிரடி கைது.. கட்டப் பஞ்சாயத்து செய்த கொடுமை!

அதிகம் பார்க்கும் செய்திகள்