ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. திமுக, நாதக வேட்பாளர்கள் உள்பட.. மொத்தம் 65 பேர் வேட்பு மனு தாக்கல்

Jan 17, 2025,05:41 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 65 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.


ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல் ஏவாக இருந்த  ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலைக் குறைவால் காலமானார். இதனால் அங்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் அங்கு வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளன. பாஜகவும் புறக்கணித்துள்ளது. இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 




இதனால் அங்கு திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி மட்டுமே முக்கியக் கட்சிகளாக களம் காண்கின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக சீதாலட்சுமி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 


வேட்பு மனு தாக்கல் குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்னரே வந்து கேட்டிருந்தோம். சூரம்பட்டி 4வழிச்சாலையில் இருந்து நடந்து சென்றே வேட்பு மனு தாக்கல் செய்ய கேட்டிருந்தோம். இன்று காலையில் அதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள். நாங்க சட்டத்தை மதிக்கிறோம். அதனால் நான் தனியாளாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். 


திமுக அராஜகத்தின் தொடக்கத்தை செய்ய தொடங்கி விட்டார்கள்.  நேற்று தனியாக பதாகைகளை வைத்துக் கொண்டு ஓரமாக நின்றிருந்த எங்களுடைய 8 உறவுகள் மீது  வழக்கு போட்டுள்ளார்கள். ஏதாவது ஒரு இடைஞ்சல் பண்ணி இருக்காங்க அல்லது தவறுகள் பண்ணியிருக்கனும். எதுவுமே செய்யாமல் அவர்கள் மீது வழக்கு போட்டு அச்சத்தை ஏற்படுத்தியிருக்காங்க. இது பெரிய அராஜகம். 

போன வருட தேர்தலில் மக்களை பட்டியலில் அடைப்பது போல அடைத்திருந்தார்கள். திமுக முழுக்க முழுக்க  மண்ணுக்கு எதிரான மக்களுக்கு எதிரானதை செய்கிறது.நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். இதனால், இன்று நான் ஒற்றை ஆளாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். திமுக வா... நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமியா என்று பார்த்து விடுவோம். 


எவ்வளவு வழக்குகள் பாய்ந்தாலும் என் மீது மட்டும் பாய வேண்டும். எந்த தவறுகளும் செய்யாத என் உறவுகள் மீது இந்த வழக்குகள் பாயக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கின்றேன். இதுவரைக்கும் எங்களுக்கு சின்னம் உறுதியாகாமல் தான் இருக்கிறது. தலைமை இது குறித்து பேச போயிருக்கிறார்கள். சின்னம் குறித்து  மாலை இறுதியாக சொல்லப்படும். 




திட்டமிட்ட வன்முறையை நாம் தமிழர் கட்சி மீது கட்டமைத்து செய்கிறது திமுக. இந்த உள்ளுரில் இருக்கும் திமுக கட்சினர்களும் எங்கள் உறவுகள் தான். திமுக தலைமை தான் பிழையாக இருக்கிறது. திமுக கொடுமையான ஆட்சி ஆராஜக ஆட்சி தான். அதை வேகோடு பிடுங்கி எறியாமல் எங்களுக்கு வேறு வேலை இல்லை என்று தெரிவித்திருந்தார் சீதாலட்சுமி.


அதன் பின்னர் தனது நடை பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக சிறிது தூரம் தனி ஆளாக நடந்து சென்றார் சீதாலட்சுமி. அதன் பின்னர் தனது கட்சியினரோடு காரில் சென்று தேர்தல் அதிகாரி மனீஷிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.


மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று கொடுக்கப்பட்ட  அவகாச முடிவில் மொத்தம் 65 வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். நாளை மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து மனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்படும். அதன் நிறைவாக சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.


நாம் தமிழர் கட்சி தற்போது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக உருவெடுத்துள்ளது. அந்த அங்கீகாரம் கிடைத்த பிறகு அக்கட்சி முதல் முறையாக போட்டியிடும் தேர்தல் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில்.. பிப்ரவரி 5 பொது விடுமுறை அறிவிப்பு

news

வட மாநிலங்களைப் போல.. இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்.. செல்வப்பெருந்தகை கண்டனம்

news

கோமியம் விஞ்ஞான பூர்வமாக அமிர்த நீர்.. ஆயுர்வேத மருந்து.. அரசியலாக்காதீர்கள்.. டாக்டர் தமிழிசை

news

கொல்கத்தா பாலியல் வழக்கு.. சாட்சியைக் கலைத்ததே மமதா பானர்ஜிதான்.. பெண்ணின் தந்தை புகார்!

news

பெரியார் குறித்துக் கேட்ட வாக்காளர்.. ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி அளித்த பதில்!

news

சபாநாயகர் அப்பாவு சொன்ன ஞானசேகரன் இவர்தான்.. பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தரும் விளக்கம்!

news

திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி.. பட்டையைக் கிளப்ப வரும் இசைஞானி.. ரசிகர்களே ரெடியா?

news

அன்னா ஹசாரே போல.. உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்?.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு கேள்வி

news

நெகிழியின் கண்ணீர் (கவிதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்