ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கடந்த கால தேர்தல்களில் வாங்கிய வாக்குகளை தற்போதைய இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி முந்தியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட இம்முறை அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. தோல்வியிலும் ஒரு ஆறுதலாக இது அக்கட்சிக்கு அமைந்துள்ளது.
தமிழக வரலாற்றிலேயே ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு தான் அடுத்தடுத்து 2 முறை இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியானது கடந்த 2011 முதல் தேர்தலைச் சந்தித்து வருகிறது. முதல் தேர்தலில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி வாகை சூடினார். இதையடுத்து 2021ல் நடந்த பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகனான ஈவெரா திருமகன், போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில்தான் முதல் முறையாக நாம் தமிழர் கட்சி இத்தொகுதியில் போட்டியிட்டது. அத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 67,300 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கோமதி 11,629 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் இளங்கோவன் 1லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட மேனகா 10,827 வாக்குகளையும் பெற்றிருந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். இவரின் மறைவை தொடர்ந்து அத்தொகுதி காலியானதால் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது.இந்த தொகுதியில் வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 64.02% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி, 44 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக மற்றும் பாஜக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.
இதுவரை வாங்கியிராத அளவுக்கு அதிக வாக்குகள்
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கப் போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. காரணம், சீமானின் சமீபத்திய பெரியார் எதிர்ப்பு பேச்சுக்கள் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தின. எனவே பெரியார் பிறந்த ஊரான ஈரோட்டில் அவரது கட்சிக்குக் கிடைக்கப் போகும் வாக்குகள் கவனம் ஈர்த்துள்ளன. கடந்த தேர்தல்களில் கிடைத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்தால் சீமானின் பேச்சுக்களை நியாயப்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அப்படி இல்லாமல் போனால், சீமானின் பேச்சுக்களை ஈரோடு கிழக்கு மக்கள் ரசிக்கவில்லை என்று அர்த்தம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு உருவாகும்.
வேறு பெரிய கட்சிகள் போட்டியிடாததால் வேறு வழியில்லாமல் நாம் தமிழர் கட்சி 2வது இடத்தில் வந்தது. அதேசமயம், திமுக மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மறுபக்கம் தமிழர் கட்சிக்கு 23,810 வாக்குகள் கிடைத்துள்ளன. இது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி வாங்கிய வாக்குகளை விட அதிகமாகும்.
2021 தேர்தலில் கோமதி பெற்ற 11, 629 வாக்குகள்தான் இப்போது வரை இங்கு நாம் தமிழர் கட்சி பெற்ற அதிகபட்ச வாக்காக இருந்தது. அதை சீதாலட்சுமி முந்தி விட்டார். 2023 ஆம் ஆண்டு தேர்தலில் மேனகா 10 ஆயிரத்து 827 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த வாக்குகள் அனைத்துமே நாம் தமிழர் கட்சிக்கான வாக்குகளா என்பதும் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சராசரியாக 12 ஆயிரம் இருக்கலாம். மற்ற வாக்குகள் பிற கட்சியினரின் வாக்குகளா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றாலே நாங்கள் வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெபாசிட் தொகையைப் பறி கொடுத்தாலும் கூட, அதிக அளவிலான வாக்குகளை நாம் தமிழர் கட்சி அறுவடை செய்திருப்பதை அந்தக் கட்சியினர் பெரிதாக பேசி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!
2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!
தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!
பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!
அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?
தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்
சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!
{{comments.comment}}