ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ஈரோடு மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்ததையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தொடங்கப்பட்டு 17ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, வேப்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
இதன்பிறகு 55 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இருந்தது.நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என்பதால், சுயேட்சை வேட்பாளர்கள் 8 பேர் வாபஸ் பெற்றனர். பத்மாவதி என்ற பெண் வேட்பாளரின் பெயர் கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் இருப்பதால் அவரது மனுவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை இரு சுயேச்சை வேட்பாளர்கள் வைத்தனர். இதையடுத்து நேற்று நள்ளிரவில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
இறுதியாக திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 47 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பாஜக, அதிமுக, தேமுதிக , தவெக, உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலை புறக்கணித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தல் அன்று அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}