ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷ் மாற்றப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. இந்த தொகுதியில் வருகிற 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று, பிப்ரவரி 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் பாஜக, அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
மொத்தம் 65 வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில், 47 பேர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் ஓட்டுரிமை உள்ள பத்மாவதி என்ற சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. முதலில் 47 வேட்பாளர்கள் போட்டி என அறிவிக்கப்பட்டு, பிறகு பத்மாவதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் நீண்ட நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்து அதிகாரியாக இருந்த மனீஷ் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஸ்ரீகாந்த நேற்று இரவே பொறுப்பேற்றுக் கொண்டார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் சென்னை தலைமை தேர்தல் அலுவலகத்தில் இணை தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றியவர் ஆவார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கொடைக்கானல் செம கூல்.. வேலூரும் குளுருது.. தமிழ்நாடு முழுவதும் ஒரே ஜில் ஜில் கிளைமேட்தான்!
கத்தியால் குத்திய நபரை போராடி பாத்ரூமுக்குள் அடைத்து வைத்த சைப் அலிகான்.. தப்பியது எப்படி?
2025 தைப்பூச விரதம் : 21 நாள் முருகனுக்கு விரதம் இருக்கும் முறையும், எளிய வழிபாடும்
ஈரோடு கிழக்கு தொகுதி.. வேட்பு மனு பரிசீலனையில் குழப்பம்.. தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்
சவரன் ரூ.60,000த்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்
பெரியார் குறித்த பேச்சு.. சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்த பெரியாரிய அமைப்பினர்!
ஈரோடு கிழக்குத்.. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்.. யார் யாருக்கு என்ன சின்னம்?
கதையல்ல நிஜம்.. கல்வியா? கல்யாணமா? - Short தொடர் கதை.. பாகம் 3
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 22, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}