சேலம்: ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டு விட்டார். அவரைப் பற்றிப் பேச முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி முன்னிலையில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவை சேர்ந்தவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் கிடையாது. அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியும். காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படாது.
காவல்துறையை கையில் வைத்துள்ள தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படவில்லை. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. போதைப் பொருள் விற்பனை தாராளமாக இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த கொலையில் எவரும் கைது செய்யப்படவில்லை. அவர்களாகவே சரணடைந்துள்ளனர். இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
ஓபிஎஸ் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. அவர் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டு விட்டார். ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை. கட்சி வாகனத்தை நொறுக்கவில்லை. கட்சி பொருளை திருடவில்லை. ஆனால், இப்போது நடந்திருப்பது வேறு.
முன்னாள் அமைச்சர் எ.ஆர். விஜயபாஸ்கர் மீது போடப்பட்டது சிவில் வழக்கு, இதை கிரிமினல் வழக்கு போல மிகைப்படுத்துகின்றனர். அதிமுகவினரை பழி வாங்கும் நோக்கில் இது போன்ற வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}