240 பாடகர்கள்.. 120 டூயட் பாடல்கள்.. 12 மணி நேரம்.. எஸ்பிபிக்கு ஒரு அஞ்சலி!

Sep 22, 2023,11:37 AM IST

சென்னை: மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு சாதனை இசை நிகழ்ச்சி சென்னையில் நாளை நடைபெறவுள்ளது.


சென்னையைச் சேர்ந்த பீனிக்ஸ் க்ரூ கிளப் அமைப்பின் சார்பில் சென்னையில் நாளை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 240 பாடகர்கள் கலந்து கொண்டு 120 எஸ்பிபி டூயட் பாடல்களை, 12 மணி நேரம் இடை விடாமல் பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சி புக் ஆப் ஆசியா ரெக்கார்ட்ஸில் இடம் பெறவுள்ளது.




நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக கவிஞர் முத்துலிங்கம், இசையமைப்பாளர் பாலபாரதி,  நடிகை நளினி, பின்னணிப் பாடகி நிர்மலா நரசிம்மன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


சென்னை தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயா ஆடிட்டோரியத்தில் செப்டம்பர் 23ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி முடிவடையும்.


விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பீனிக்ஸ் க்ரூ கிளப் நிறுவனர் கோமதி ஞானம் மற்றும் இணை நிறுவனர் டி. ரமேஷ் ஆகியோர் அழைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்