பாரமுல்லா.. உமர் அப்துல்லாவை மண்ணைக் கவ்வ வைத்து.. செம வெற்றி.. யார் இந்த என்ஜீனியர் ரஷீத்?

Jun 06, 2024,05:33 PM IST

டெல்லி:  மருத்துவமனையில்  படுத்த படுக்கையாக இருந்த பல தலைவர்கள் தேர்தல் களத்துக்கு வராமலேயே ஜெயித்தது பழைய வரலாறு. இப்போது புதிய வரலாறு ஒன்று படைக்கப்பட்டுள்ளது. அது, இரண்டு கைதிகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பிரச்சாரத்துக்கே வராத நிலையில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று அசத்தியுள்ளனர்.


இவர்களில் ஒருவர் அம்ரித்பால் சிங். இவர் பஞ்சாப் மாநிலம் கதூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். இவர் தீவிரவாத போக்குடைய சீக்கிய தலைவர் என்று வர்ணிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர். அதேபோல இன்னொருவர் ஷேக் அப்துல் ரஷீத். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததாக கூறி இவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவருக்கு என்ஜீனியர் ரஷீத் என்றும் ஒரு பெயர் உண்டு. இவர் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.


இந்த இருவரும் வெற்றி பெற்றதால் சட்டக் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. இவர்களால் எப்படி எம்.பிக்களாக செயல்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருவரும் எம்.பிக்களாக பதவியேற்பதில் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லையாம். ஆனால் இருவரும் வெளியில் வந்து மக்கள் பணியாற்ற முடியாது.


என்ஜீனியர் ரஷீத்




இவர்களில் என்ஜீனியர் ரஷீத், 20219ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி கைது செய்யப்பட்டு அப்போது முதல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு பாஜக ஆட்சி முழுவதும் சிறைவாசம் அனுபவித்துள்ள அவர் அடுத்த பாஜக ஆட்சிக்கு வரும்போது எம்.பியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


என்ஜீனியர் ரஷீத், ஜம்மு காஷ்மீர் அவாமி இத்திஹாத் என்ற கட்சியை நிறுவியவர். 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். காஷ்மீரிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். பாரமுல்லா தொகுதியில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார்.  இதில் யாரும் எதிர்பாராத வகையில் உமர் அப்துல்லாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளார் ரஷீத்.


ஆரம்பத்தில்  என்ஜீனியராக இருந்தவர் ரஷீத். இதனால்தான் அவரது பெயர் என்ஜீனியர் ரஷீத் என்றும் கூப்பிடப்படுகிறது. பின்னர் மக்களுக்காக அரசியலுக்கு வந்தார். மக்களோடு மக்களாக இருந்தவர். யுஏபிஏ சட்டத்தால் கைது செய்யப்பட்ட முதல்  அரசியல் தலைவர் என்ற பெயர் ரஷீத்துக்கு உண்டு. லோக்சபா தேர்தலில் ரஷீத்துக்காக அவரது இரண்டு மகன்கள்தான் தீவிரப் பிரச்சாரம் செய்தனர். தொடர்ந்து மக்களை சந்தித்தும், ஏராளமான கூட்டங்களை நடத்தியும் ரஷீத்துக்கு ஆதரவு திரட்டினர். பாரமுல்லா தொகுதியிலும் ரஷீத்துக்கே மக்கள் ஆதரவு இருந்ததால் தற்போது அவர் வென்றுள்ளார்.


இரு தலைவர்களும் தற்போது நீதிமன்ற அனுமதியுடன் நாடாளுமன்றம் சென்று எம்.பிக்களாக பதவி ஏற்க வேண்டும். அதன் பிறகு என்ன மாதிரியான சட்ட நடைமுறைகள் உள்ளதோ அதற்கேற்ப இவர்கள் எம்.பி பதவியில் தொடர்வது தீர்மானிக்கப்படும்.


அம்ரித் பால் சிங்




மறுபக்கம், அம்ரித் பால் சிங் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 


சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் அம்ரித் பால் சிங். காங்கிரஸ் வேட்பாளர் குல்பீர் சிங் ஜிராவை அவர் கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். சிறையிலிருந்தபடி வெற்றி பெற்றுள்ள அம்ர்தி பால் சிங்கை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவரது வக்கீல் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், அம்ரித் பால் சிங்கை விடுவிக்க வேண்டும். இதைத் தவிர அரசுகளுக்கு வேறு வழியில்லை. பஞ்சாப் ஆம் ஆத்மி அரசும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இதைச் செய்ய வேண்டும். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மேலும் 2 மகன்கள் உள்ளனராம்.. யார் மூலமா தெரியுமா?.. பரபர தகவல்!

news

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பினார் மகாவிஷ்ணு.. சைதாப்பேட்டை போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை!

news

ஸ்டிரைக் அறிவிப்பை மறு பரிசீலனை பண்ணுங்க.. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

news

சின்னத்திரையில் பாலியல் அத்துமீறல்கள் கிடையாது.. எல்லாமே மியூச்சுவல்தான்.. நடிகையின் ஸ்டேட்மென்ட்!

news

28வது வருட திரையுலக வாழ்க்கையில் சிம்ரன்.. தி லாஸ்ட் ஒன்.. நாயகியாக மீண்டும் ரீ என்ட்ரி!

news

விதம் விதமான விநாயகர்கள்.. தமிழ்நாடு முழுவதும் 35,000 சிலைகள்.. விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

news

விளையாட்டுக் களத்திலிருந்து.. அனல் பறக்கும்.. தேர்தல் களத்திற்கு என்ட்ரி கொடுக்கும் வினேஷ் போகத்!

news

செப்டம்பர் 07 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

ரிஷப ராசிக்காரர்களே... திறமை வெளிப்படும் காலமிது

அதிகம் பார்க்கும் செய்திகள்